சுயாதீன தொழில் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

சுயாதீன தொழில் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

சுயாதீன தொழிலின்(Freelancing) மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம்.

12/09/2018 | Views 245

இன்றைய காலத்தின் கட்டாயம் கண்டிப்பாக ஒவ்வொரு நபரும் எதையேனும் ஒரு தொழிலை கண்டிப்பாக செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சம்பாத்தியம் என்பது அனைத்து தரப்பினருக்கும் இன்றியமையாத தேவையாகவே உள்ளது. இதில் பல்வேறு தரப்பினரும் ஒன்றுக்கு  இரண்டு தொழில் செய்த போதிலும்  வருமானப் பற்றாக்குறையினை அனுபவித்தே வருகின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க தொழில்நிலை என்று பார்க்கும் பொழுது பலருக்கும் நிரந்தர தொழில் இன்மையால் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வருகின்றது . அத்துடன் நிரந்தர தொழில் மட்டுமே சிறந்த பலாபலனை பெற்றுத்தரும் என்று பலரும் எண்ணிக்கொள்வதுண்டு.

எவ்வாறாயினும் அனைத்து தொழில் நிலைகளுக்கும் பகுதிநேர தொழிலாளர்கள் இருக்கும் அதே நேரம் சிற்சில தொழில்களுக்கு அவ்வகை பகுதிநேர தொழிலாளர்களே தேவைப்படுகின்றனர். அவ்வாறான பகுதி நேர தொழில் புரிவோரும், தன்னார்வ தொண்டர்களும் நிரந்தர தொழிலாளர்களை விட அதிகளவில் ஊதியம் பெறுகின்றனர் என்பதனை மறுத்துவிட முடியாது.

இவ்வாறு சுயாதீன முறையில் பகுதிநேர தொழிலினை செய்துகொண்டு அதிகளவில் பணம் சம்பாத்திக்கலாம் என்றால் யாரும் வேண்டாம் என்பதற்கு இல்லை.  பகுதிநேர தொழில் பற்றி நாம் அறிந்துகொள்வதன் மூலம் அவற்றினை கொண்டு எவ்வாறு அதிகளவில் சம்பாதிக்கலாம் என அறிந்துகொள்ளுங்கள்.

 

எதிர்காலத்தின் தேவையாளர்கள் சுயாதீன  தொழிலாளர்கள்.

தற்காலத்தில் தொழில்நிலை என்ற பொழுது அனைத்து நிலைகளில் நீண்டகால ஸ்திரத்தன்மையினை கொண்டிருப்பது இல்லை என்பதுவே மறுக்கமுடியாத உண்மை. அந்தந்த காலம் மற்றும் நிலைகளுக்கு ஏற்ப தொழில்கள் பலதும் புத்துருவாகுவதும், அதே வேகத்தில் இல்லாமல் போவதுமாகவே இருப்பதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இது தொழில் நிலைகளின் தவறு இல்லை. அவ்வந்த கால, நேர மாற்றத்திற்கு ஏற்ப தொழில்கள் உருவாக்குவதும் , இல்லாமல் போவதும் நிகழும் ஒரு சாதாரண விடயமே. எனவே இவ்வகை ஸ்திரமற்ற தொழில்களுக்கு நிரந்தர தொழிலாளர்களை ஈடுபடுத்துவது தொழில் தருணருக்கும், தொழிலாளருக்கு பாரிய பிணக்கினை ஏற்படுத்தக்கூடியது. 

இந்த முறுகல் நிலைக்கு சிறந்த யுக்தியே சுயாதீன பகுதிநேர தொழிலாளர்களை இவ்வகையான நிரந்தரமற்ற தொழிலுக்கு அமர்த்தி வேலைகளை செய்துகொள்வது ஆகும். இதன் மூலமாக பணம், மற்றும் நேர வீண் விரயங்களில் இருந்தும் பல்வேறு இன்னல்களில் இருந்தும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் தருனர்  ஆகியோரும் இலகுவாக தப்பித்துக்கொள்ள முடியும் என அறியப்படுகின்றது.


பணம் தொடர்பான சவாலை சமாளிக்க கூடியவர்கள்.

தற்கால அனைத்துவித மிகவும் சவாலான விடயம் அந்தந்த வேலைகளுக்கு ஏற்ப பணத்தினை சம்பாதிப்பது ஆகும். இது முழுநேர பணியாளர்களால் முற்றுமுழுதாக எதிர்கொள்ள முடியாத சவால்நிலை ஆகும். வேலைகளில் காணப்படும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய போதிலும் அவற்றுக்கான சரியான ஊதியம் என்பது பெற்றுக்கொள்வதில் சிரமமான நிலையே உள்ளன.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட வரையைறைகளுக்கு உட்பட்டு செயல்படும் சுயாதீன பகுதிநேர தொழிலாளர்களின் மீது அதிக வேலைப்பளு சுமத்தப்படுவது இல்லை எனவே பணம் தொடர்பான சவாலினை அவர்கள் பெருவாரியாக எதிர்கொள்வது இல்லை.

 

பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முகவர்கள் 

தொழில் ரீதியில் கடந்தகாலங்களில் சுயாதீன பணியாளர்கள் என்றால் ஒருவித அச்சநிலை இருந்து வந்தது. நிலையாமை என்பது அசாதாரணாமாக தோன்றிய காலங்களில் இவ்வகை சுயாதீன பணியாளர்களின் தேவைகள் தொழிலுக்கு மிகவும் அரிதாகவே தோன்றின.

காலப்போக்கில் பல்வேறு உடனடி தேவைகளும், தொழில்களும் அதிகரித்துக்கொண்டு வந்ததை அடுத்து இவ்வகை சுயாதீன தொழிலாளர்களின் தேவைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டு அவர்களை ஏற்றுக்கொள்ளப்பட்ட முகவர்களாக பல தொழில் நிறுவனங்களும் வேலைக்கு அமர்த்துவது அறியப்படுகின்றது.

 

இணையவழி வேலைகளின் அதிகரிப்பு 

தற்போது அனைத்து தொழில்களிலும் இணையத்தின் தேவை இன்றியமையாததாகிவிட்டது . இவ்வகை வேலைகளுக்கு நிரந்தர பணியாளர்களை விட சுயாதீன தொழிலாளர்களே தேவைப்படுகின்றனர். காரணம் குறிப்பிட்ட இடம் மற்றும் பிரதேசம் என்று இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இணையத்தின் உதவியுடன் மிகவும் இலகுவாக வேலைகளை செய்து முடிக்க இவ்வகை சுயாதீன தொழில் முயற்சியாளர்களின் உதவி இன்றியமையாததாகியது.

 

நெகிழும் தன்மை கொண்டவர்கள் 

நிரந்தர பணியாளர்கள் சில குறிப்பிட்ட வேலைகளுக்காக மாத்திரமே தம்மை பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டு இருப்பது அறிந்தது. அவர்களால் பல்தொழில் திறமை என்பது இல்லாமல் இருக்கும். எனவே இவ்வகை தொழிலாளர்கள் குறிப்பிட்ட ஒரே தொழிலில் மாத்திரம் சிறப்பு தேர்ச்சியினை பெற்றிருப்பதால் அவர்களின் மூலமான பணி செய்யற்பாடுகள் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

மாறாக சுயாதீன பணியாளர்களின் பணிகள் பொதுவாக பல்வகைத்தன்மையினை கொண்டது,இடங்களுக்கு ஏற்ப மாறும் தன்மையினை கொண்ட பணிகளினையையே இவ்வகை சுயாதீன பணியாளர்கள் மேற்கொள்வது தற்கால தொழில் தருனர்களுக்கு மிகவும் இலகுவாக அமைகின்றது.