உங்கள் இலக்குகளை அடைந்துகொள்ள காட்சிப்படுத்தல் சிறந்த  வழி.

உங்கள் இலக்குகளை அடைந்துகொள்ள காட்சிப்படுத்தல் சிறந்த  வழி.

மனக்கண்ணில் தோன்றும் காட்சிகள்  உங்களை வெற்றியடைய செய்யும்.

21/09/2018 | Views 236

எமது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், மற்றும் ஆரோக்கியமாகவும் அமைத்துக்கொள்வதற்கும் நாம் நிர்ணயிக்கும் குறிக்கோள்கள் திறன் மிக்கதாக இருக்க வேண்டும். ஆயினும் அவற்றினை அடைந்துகொள்வது எளிதான காரியம் அல்ல. இலக்குகளை நிர்ணயித்து அடைந்துகொள்வதற்கு உந்துதலுடன் கூடிய செயல்திறனுடைய திட்டத்தினை வகுத்துக்கொள்வது சிறந்தது. 

உங்கள்  கனவுகளை அடைந்துகொள்ள உந்துதல் மிகப்பெரிய சவாலாக இருந்த போதிலும் அவற்றினை இலகுவாக அடைவதற்கு இன்னுமொரு யுக்தியே அந்த இலக்கு தொடர்பான மனக்கண் காட்சிப்படுத்திக்கொள்வது .

மனக்கண்ணில் காட்சிப்படுத்துவது நிஜமற்ற மாயமானதொரு விடயம். இதன்மூலம் உங்கள் இலக்குகளை நிஜமாக அடைந்துகொள்வது சாத்தியமா? என்ற எண்ணம் பலருக்கும் எழுவது உண்டு. ஆயினும் பிரபல்யர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இவ்வகையான வெற்றிகளை அடைந்துகொள்வது போன்று தத்தமது மனக்கண்ணில் மூலம் காட்ச்சிப்படுத்தி பார்த்துக்கொள்வதுவு அவர்களை இலகுவாக வெற்றியடைய செய்துள்ளதாக தமது அனுபவத்தினை பலரும் பகிர்ந்துள்ளதனை அறியமுடிகின்றது.

"சிறந்த அனுபவம் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள,  எமது எமது எண்ணத்தில் தோன்றும் காட்ச்சிப்படுத்தல் சிறந்த தடயமாக விளங்கிடும்" என மனநல ஆய்வாளர் Karolina Pasko தெரிவித்துள்ளார்.  அதாவது எமது மனநிலை உணர்ச்சிவயப்படும் போதே அவற்றினை செய்துகொள்வதற்கான வாய்ப்புக்களை நாம் இனம்காணவும் முடிகின்றது என்பது அவரின் ஆய்வின் போதான கண்டறியப்பட்ட விடயம் என குறிப்பிடுகின்றார்.

 

மனக்கண் காட்சிகள் எவ்வாறு இலக்கை அடைய உதவும்?

உணர்வுகளின் தூண்டுதலின் பின்னரே மனக்கண்ணில் காட்சிப்படுத்தல் நிகழ்கின்றது. அதுவே நீங்கள் ஏதெனும் விடயத்தை உணர்வுபூர்வமாக , ஆழமாக உணரும் பட்சத்திலேயே அவற்றின் வெளிப்படுத்தல்களாக மனக்கண் காட்ச்சிகளை காண்கின்றீர்கள். 

எமது கற்பனை நினைவுகளையும் நிஜத்தின் நிகழ்வுகளையும் எமது மூளைக்கு பிரித்து அறிந்துகொள்ள முடியாது என்பது மருத்துவ ரீதியில் அறிந்துகொள்ளப்பட்ட உண்மை. எமது மனதில் தோன்றும் காட்சிகள் உண்மையானவை என்றே முதலில் நமது உணர்வுகளுக்கு தூண்டப்படும். ஆயினும் அவை நிஜமானவையல்ல என உணர்ந்துகொள்வதற்கு தாமதமாகிறது.

இது எவ்வாறு சாத்தியம் என்று நீங்கள் கேட்டால், நமது அன்றாட கனவில் தோன்றும் சில காட்சிகள் நிஜத்தில் நடப்பது போன்று தத்ரூபமாக தோன்றுவதுடன், அதன் பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கு எமது மனது மற்றும் மூளையானது சற்றே தாமதிக்கும் என்பதை உணர்ந்து பாருங்கள்.

அண்மையில் இலண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் இதற்கென மேற்கொள்ளப்பட்ட ஆய்வுநிலைகளின்போது , அந்த ஆய்வுக்கு பயன்பட்ட நபர்களின் கற்பனை எண்ணத்தின் காட்சிகளை கணினி உதவியுடன் படமாக வரைந்து வெளிப்படுத்தியுள்ளனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

நேர்மறையான எண்ணங்களைக்கொண்ட காட்சிப்படுத்தல்கள் மற்றும் மனக்கண்  காட்சிகள் போன்றன  உங்களின் எண்ணங்களை மற்றும் உணர்வுகளை நேர்மறையான எண்ணங்களால் தூண்டுவதுடன் பல நல்ல பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தவும் உதவிடும் என மனநல ஆய்வாளர்கள் அறியத்தந்துள்ளனர், இவ்வகை மூளையின் நேர்மறை செயற்பாடுகள் உடலியக்கத்தினையும் ஆரோக்கியமானதாக வைத்திருப்பதாகவும் மேலும் அறியப்படுகின்றது.

 

 

மனக்கண் காட்சிப்படுத்தலின் அனுகூலங்கள் 

 

1. உங்கள் இலக்குகளை அடைந்துகொள்ள உந்துதலாக இருக்கும்.

இலக்கினை அடைந்துகொள்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் கடின முயற்சிகளுக்கான காட்சிப்படுத்தல்கள் உங்களுக்கு சிறந்த பலாபலனைத்தரும் என கூறப்படுகின்றது. இதன்மூலம் பல இன்னல்களில் இருந்து நீங்கள் பாதுகாப்பு பெறுவதுடன் , உங்கள் தீர்மானங்களை அடைந்துகொள்வதற்கான செயற்பாடுகளை சீராக மேற்கொள்ளவும் பெரும் உதவி புரிகின்றது.

 

2. தோல்வி நிலைகளில்  இருந்து விடுபட உதவும்.

மனோவியல் ரீதியில் உங்களுக்கு தோன்றக்கூடிய எதிர்மறையான எண்ணங்களை நினைவில் இருந்து விலக்கிட செய்வதன் மூலம் புதிய சவால்களுக்காக உங்களை மனதளவில் தயார்படுத்திடும். இதன் காரணமாக தோல்வி நிலைகள் உங்களை அண்டாது.

 

3. நம்பிக்கையை வலுப்படுத்தும்.

நீங்கள் வெற்றியடைந்த விடயங்கள் தொடர்பிலான மனக்கண் காட்சிப்படுத்தல்களின் மூலம் முன்னர் நீங்கள் அடைந்த வெற்றிநிலைகளின் சிந்தனைகளைக் கொண்டு உங்களுக்கு உறுதியான நம்பிக்கையினை வளர்த்துக்கொள்ள முடியும் . நேர்மறையான எண்ணங்களே உங்கள் மனக் கிளர்ச்சிக்கு அத்திவாரம்.

 

4. அமைதியான மனநிலை மூலம்  உங்கள் மனதை சாந்தப்படுத்தும் .

தியானம் உள்ளிட்ட மனதை கட்டுப்படுத்தும் பயிற்சிகளானவை உங்கள் மனக்கிலேசங்களை சாந்தப்படுத்துவதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை உங்களுக்கு வரவிடாமல் தடுக்கும். அவ்வாறே  சாந்தமான மனநிலையின் மூலம் பல புதுப்புது சிந்தனைகளை நீங்கள் உருவாக்கிக்கொள்ளவும் வழிவகுக்கும்.

 

 

மேற்கண்ட முறைகள் அனைத்தும் உங்கள் மனதிற்கு கொடுக்கும் பயிற்சிகளின் மூலமாக உங்களது தூரநோக்குடனான இலட்சியக் கனவினை நனவாக்கிக்கொள்ள உதவிபுரிவது ஆகும். சிந்தனை  இருக்கும் மகத்தான சக்தியே இல்லாதது ஒன்றினை இருக்கும் என உறுதிபடசெய்திட வைப்பது. இதன் உதவியுடன் நாம் பல சாதனைகளை புரியலாம் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.