அமர்ந்திருப்பதால் ஆபத்துக்கள் அதிகம்.

அமர்ந்திருப்பதால் ஆபத்துக்கள் அதிகம்.

உங்கள் ஆரோக்கியத்திற்காக எழுந்து நில்லுங்கள்.

21/09/2018 | Views 243

தற்காலத்தில் அனைவரும் 8 முதல் 12 மணி நேரமாவது தொடர்ந்து இருக்கையில் அமர்ந்தபடி பணிபுரிபவர்களாகவே உள்ளோம். இருக்கையில் அமர்ந்துகொண்டு பணிபுரிவது பல வேலைகளை இலகுவாகவும், சிரமம் இல்லாமலும் செய்வதற்கு வசதியாக இருப்பதாக நாம் நினைத்து வைத்திருப்போம்.

ஆயினும் பல்வேறு நோய்கள், குறைபாடுகளில் மனிதன் தற்காலத்தில் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றான்  எனின் அதற்கு அதிகநேரம் இருக்கையில் அமர்ந்து இருப்பது ஒரு காரணமாக அறியப்பட்டுள்ளது. 

இதுதவிர்த்து அதிகநேரம் இருந்து வேலைசெய்வதால் ஏற்படும் ஆபத்துகள் எவை என பார்ப்போம்.

 

நாட்பட்ட நோய்களை ஏற்படுத்தும் 

இக்காலத்தில் பலருக்கும் பல்வேறு புதிய நோய்களும், உடல் ஆரோக்கிய குறைபாடுகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இவ்வகை பாதிப்புகள் அனைத்திற்கும் ஒரு முக்கிய காரணியாக  இருப்பது நாம் பலமணிநேரங்களாக இருக்கையில் அமர்ந்து வேலைசெய்வது என கண்டறியப்பட்டுள்ளது. 

தற்பொழுது உலகில் அதிகளவிலானவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் ஆகியன பரவலாக ஏற்படுகின்றது . இவற்றுக்கு பல்வேறு காரணிகள் கூறப்பட்ட போதிலும் நாம் அதிகநேரம் அமர்ந்து வேலை செய்வதுவும் கூட ஒரு முக்கிய காரணி ஆகும் என இனம்காணப்பட்டுள்ளது.

 

இறப்பிற்கான வாய்ப்புக்கள் அதிகம் 

நீண்டகாலமாக இருக்கையில் அமர்ந்து வேலைசெய்ப்பவர்களுக்கு மரணம் விரைவில் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 15% சதவீதம் முதல் 20% சதவீதம் வரை அதிகளவில் காணப்படுவதாகவும் ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தினசரி 4 மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்தும் ஒரே இருக்கையில் அமர்ந்து வேலைசெய்வது ஆபத்தினை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும், ஒரு சிலருக்கு தொடர்ந்து 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்களுக்கு அமர்ந்து இருப்பதுவும் கூட உடல் கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் இனம்காணப்பட்டுள்ளது.

 

கலோரிகள் எரியூட்டப்படுவது குறைவடையும்.

தொடர்ந்தும் அமர்ந்தபடி இருப்பதன் மூலம் உடல் அவயங்கள் செயல்படுவது குறைவாகவே இடம்பெறும் . இதனால் உடலவயங்களுக்கு சக்தியை பெற்றுத்தரும் கலோரிகளின் எரியூட்டல் தன்மை குறைவடைகின்றது. இதனால் அவயங்களை கிடைக்கவேண்டிய சக்தியானது சரியாக கிடைப்பதில்லை.

சக்திகள் கிடைக்கப் பெறாமையால் உடல் அவயங்கள் செயலிழப்புக்கள் மற்றும் தசைப்பிடிப்பு உள்ளிட்ட உடலியக்க கோளாறுகள் ஏற்பட்டு உடல் நலம் வெகுவாக பாதிக்கப்படும் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.

 

உடல் பருமன் அதிகரிக்கும்.

உடலில் இயக்க தன்மை மற்றும் சக்தி வெளிப்பாடுகள் நிகழாமல் போனால் தேவையற்ற கொழுப்புக்கள் உடலில் தேங்கிவிடுகின்றன. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதுடன் நாட்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு  முக்கிய காரணியாகவும் இவை அமைந்துவிடுகின்றன.

உடல் பருமன் அதிகரிப்பானது உடல்நிலை மாற்றத்தில் மட்டுமன்றி மனநிலை மாற்றத்தையும் ஏற்படுத்தும், மனசோர்வு, விரக்திநிலை போன்ற இவ்வகை உடல் பருமன் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பாரிய ஆபத்துக்கள் ஆகும்.

 

கைகால் மற்றும் மூட்டு வலி, எலும்பு வலுவிழப்பு 


இருக்கையில் ஒரே நிலையில் அமர்ந்து பணிபுரிவதனால் உங்களது கைகளும் கால்களும் பெருவாரியாக செயல்படுவது குறைகின்றது. எனவே இரத்த சுற்றோட்டத்தை தடைகள் ஏற்படுவதுடன் மூட்டு, என்பு போன்றவற்றில் வலி, வீக்கம் என்பன பேரளவில் ஏற்படும்.

அவ்வாறே என்பு மச்சைகள் வலுவிழந்து ஒஸ்திரியோப்ரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு இவ்வகை அதிக நேரம்  அமர்ந்திருப்பதுவும் காரணம் என இனம்காணப்பட்டுள்ளது 

இவை தவிர்த்து உடலுக்கு ஏற்படும் சோம்பல் நிலையானது அமர்ந்துகொண்டு வேலை செய்வதன் மூலம் அதிகப்படுத்தப்படுகின்றது. இவ்வகை சோம்பல் நிலையானது உடலுக்கும், மனதுக்கும் ஆபத்தான விளைவினை ஏற்படுத்தும்.

 

எவ்வாறாயினும் சுறுசுறுப்பாக , சிறிதுநேரம் நடந்து, ஓடி, உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உங்களின் உடல் ஆரோக்கியநிலை பாதுகாக்கப்படுவதனை மருத்துவ ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கென நீங்க எழுந்து நின்று போரிட வேண்டியது உங்கள் தலையாய கடமை என்பதை மறுக்க முடியாது.