தொழில் தொடங்க தேவையான பணம் தரும் மந்திரங்கள்

தொழில் தொடங்க தேவையான பணம் தரும் மந்திரங்கள்

தொழிலை தொடங்கிட பணத்தை எவ்வாறு இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்?

25/09/2018 | Views 2404

தொழில் முனைவு அல்லது தொடக்கத்திற்கான ஆரம்பநிலை பயணமானது மிகவும் கடினமான பாறையினை தகர்ப்பதை போன்றது. இந்த பாதையில் முன்னேறி செல்வதற்கும், அதன் மூலம் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பணப்பரிமாற்றங்களை நிர்வகிப்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்த போராட்டத்தில் 9/10 வீத தொடக்க நிலை தொழில்கள் தோல்வி நிலை தொழில்களாகவே மாறியுள்ளன. இதற்க்கு பல காரணிகள் இருந்த போதிலும் போதுமான மூலதனம் இன்மையே பல தொடக்க நிலை வணிகங்கள் இல்லாமல் போவதற்கு காரணியாகும்.

தொடக்க நிலை வணிகங்களை செயற்படுத்தி தொடர்ந்து செல்வதற்கு இரண்டுவகை மூலதனங்களை நாம் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் ஆகும். ஒன்று தொழிலை ஆரம்பிக்க தேவையான தொடக்க நிலை மூலதனம் (Starting Capital), அடுத்தது நிலையான செலவுகளுக்காக ஒதுக்கமாக செலவிடக் கூடிய தொடர்நிலை மூலதனம் அல்லது தனிப்பட்ட மூலதனம் (Private Capital)

இவ்வகை தொடக்கநிலை வணிகங்களை வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல தேவையான பணத்திற்கான மந்திரங்கள் இவைதான்.

 

தனிப்பட்ட வாழ்வாதார முதலீட்டினை உருவாக்குதல்.

தனிப்பட்ட நிதி திட்டமிடல் முன் ஏற்பாட்டில்  இருந்து பொதுவாக முதல் 6 முதல் 12 மாதங்கள் வரை அவசர நிதியச்செலவுகளுக்காகவும் ஒதுக்கம் செய்து வைக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றீர்கள். அப்படி செய்வதன் மூலம் உங்கள் சம்பளத்தினை நீங்கள் நினைத்த அளவு பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும்.

இதான் காரணமாக முதல்ல 18 முதல் 24 மாதங்கள் வரையான வாழ்வாதார செலவினங்களுக்காக இந்த திட்டமிடலை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். இந்த மாற்றீடுகளுக்காக குறுகிய நிதிக்கடன்களை பெற்றுக்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகின்றீர்கள்.

எவ்வாறாயினும் நீண்டகால, பெருந்தொகை நிதிக்கடன்கள் மற்றும் கட்டணங்களை பெறாமல் இருப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வகை கடன்பொறுப்புக்களை சுமப்பதற்கான வலிமையானது, தொடக்கநிலை வணிகர்களுக்கு இருப்பது மிகவும் அரிது, எனவே தனிப்பட்ட செலவினங்களுக்கு, வாழ்வாதார வருமானத்திற்குமான முதலீட்டினை தொழில்முயற்சியாளராக வேறு வழியில் பெற்றுக்கொள்வதே ஆரம்ப நிலை வணிகங்களுக்கு சிறந்த பலன் ஆகும்.

 

போதுமான ஆயுள் காப்பீட்டினை உறுதி செய்க.

முதலில், உங்களுடைய குடும்பத்தின் வாழ்க்கை செலவினங்களை உள்ளடக்கிய போதுமான ஆயுள் காப்பீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். உங்கள் வயது மற்றும் குடும்ப சூழ்நிலையை பொறுத்து, இது 10 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்க்கை செலவினங்களைக் கொண்டிருக்கும். 

இவ்வகை ஆயுள் காப்பீட்டினை மேற்கொள்ளும் பொழுது பின்வரும் இரண்டு விடயங்களை கட்டாயம் கவனத்தில் வைத்திருங்கள்.

1. தொழில் உருவாக்கத்தின் பின்னர் உங்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டாலும், உங்களின் ஆயுட் காப்புறுதி தொகையினை அதிகரிக்க முயலாதீர்கள், இதன்மூலமாக வருவாயிலோ அல்லது நன்மையிலோ எதுவித மாற்றங்களும் நிகழப்போவது இல்லை.

11. உங்கள் காப்பீட்டின் மூலமான சலுகைகளில் உங்கள் குழந்தைக்கான கல்விக்கடன் வசதி மற்றும் வீட்டுக்கடன் வசதிகள் போன்ற எதிர்கால செலவுகள் உள்வாங்கப்பட்டு இருக்க வேண்டியது கட்டாயமானது 

இதற்கு முன்னதாக நீங்கள் கடினமானதும், சலுகைகள் குறைந்ததுமான ஆயுட் காப்புறுதியினை மேற்கொண்டிருப்பின் அவற்றில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்வதே சிறந்த முடிவு ஆகும். மாறாக அதன் சுமைகளை மேலும் சுமப்பதானது உங்களை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளிவிடும்.

 

போதுமான உடல்நல காப்பீட்டினை உறுதிசெய்க 

நீங்கள் தொழிலாளியாக இருக்கும் பொழுது உங்கள் தொழில் தருனர்களால் கண்டிப்பாக உடல்நல காப்பீட்டினை செய்து வைத்து இருப்பீர்கள். இது தொழில்முனைவோராக நீங்கள் மாறும்பொழுது கண்டிப்பாக உங்கள் தொழில்நிலைக்கு ஏற்ப உடல்நல காப்பீட்டினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

அவ்வாறே உங்கள் சக குடும்ப உறுப்பினர்களுக்கும் இவ்வகை உடல்நல காப்பீட்டினை சுமார் 10 முதல் 15 இலட்ச்சத்திற்குமான தொகையுடையதாக ஏற்படுத்த தவற வேண்டாம். 

வணிக தொடக்கத்தில் இது அவசியம்தானா என நீங்கள் எண்ணலாம். ஆனால், உங்கள் குடும்ப சூழலின் பாதுகாப்பானது உங்கள் வணிக நிலைகளின் தாக்கத்தினை குறைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

நெகிழ்ச்சியான செயற்பாட்டு மூலதன ஒதுக்கம்.

ஆரம்பநிலை வணிகங்களுக்கு முதல் சில மாதகாலத்திற்கு மூலதன வருமானம் மற்றும் பேரளவு இலாபம் என்பது மிகவும் அரிதானது. அத்துடன் வருமானம் இன்றிலும் கட்டாய செலவினங்கள் என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.

இதற்கென திரும்ப பெறக்கூடிய இலகுக்கடன் வசதிகளை நீங்கள் ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது. இதனால் நீங்கள் நெகிழும் தன்மையினைக்கொண்ட வரி சலுகை நன்மைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வகை கடன்களை உங்களின் குறுகியகால நிதி தேவைகளுக்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கென பல்வேறு திட்டங்களை வகுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் கடன்சுமைகள் மற்றும் செலவின தாக்கங்களில் இருந்து உங்களை பாத்துக்க கொள்ளவும் முடியும்.

 

உச்சநிலை வளர்ச்சியை உறுதிசெய்க.

அதிக வளர்ச்சி நிலைகளின் போது உங்களின் பணத்தின் தேவையானது குறைவடைய தொடங்கும். இதனை வலுப்படுத்திக்கொள்ள புதிய வருமான மூலங்களை வளர்த்துக்கொள்வது முக்கியமாகும்.


அவ்வாறே ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களின் மூலமான வருவாயினை அதிகரித்துக் கொள்வதும் முக்கியத்துவம் பெறுகின்றது. இவற்றின் மூலம் வியாபார வளர்ச்சியுடனான செலவின  குறைப்பானது உறுதிப்படுத்தப்படுகிறது.

 

பணம் தொடக்க வணிகத்தின் முக்கிய அம்சம் என்ற பட்சத்தில் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது மற்றும் செலவினங்களை குறைப்பது என்பது தொடர்பான யுக்தியே உங்கள் ஆரம்பநிலை தொழிலுக்கான தாரக மந்திரமாக நீங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமான விடயம் ஆகும். எனவே உங்கள் தொடக்கநிலை வணிகத்தின் வெற்றிக்கு மேல் குறிப்பிட்ட மந்திரங்களை செய்து பார்ப்பதன் மூலமாக  நன்மைகள் அதிகரிக்கப்படும் என்பது உறுதியானது.