நீரிழிவு நோயாளர்கள் நன்றாக உணவருந்த வேண்டும்.

நீரிழிவு நோயாளர்கள் நன்றாக உணவருந்த வேண்டும்.

நீரிழிவு நோயாளர்கள் எவ்வாறு உணவுக்கட்டுப்பாட்டினை மேற்கொள்வது.

25/09/2018 | Views 202

நீங்கள் நீரிழிவு நோயாளர்களாக இனம்காணப்பட்டால் பலரும் உங்களது உணவில் கட்டுப்பாடுகள் பலவற்றினை மேற்கொள்ளுமாறு பணிப்பது அறியக்கூடியதாக இருக்கும். அத்துடன் அவற்றுக்கான செலவுகளானது சாதாரண உணவுகளுக்கான செலவினங்களை விட அதிகமானதாக இருக்கும் என அச்சம்கொள்ள தேவையில்லை.

குறைந்த செலவினத்தில் சிறந்ததும் , மிகுந்த ஆரோக்கியமானதுமான உணவுக்கு கட்டுப்பாட்டினை நீரிழிவு நோயாளர்கள் கடைபிடிக்கலாம் என அறியப்படுகின்றது. இதற்கான சில யுக்திகள் இங்கு தரப்படுகின்றது.

 

சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்வது.

பலரும் கூறுவதுண்டு நீரிழிவு நோயாளர்கள்  சிற்றுண்டிகள் அதிகமாக எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்திட வேண்டும் என. ஆனால் அவ்வாறு இல்லாமல் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் சிற்றுண்டிகளை சரியான முறையில் எடுத்துக்கொள்வதே அவர்களுக்கான சிறந்த உணவுக்கட்டுப்பாடு முறையாகும்.

எவ்வாறாயினும் அவர்களின் தினசரி உணவுகளில் மேலதிக சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்வது அவசியம் இல்லை என கூறப்படுகின்றது.பொதுவாக, அவர்களின் உணவு மேற்கொள்ளும் இடைவெளியானது மிக நீண்ட நேரமாக இருக்கும் பட்சத்தில் உணவுக்கு இடையில் சிற்றுண்டி எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும். இதன்மூலம் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பியின்  உற்பத்தி தூண்டப்படுகிறது. இதன் மூலம் குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவடைகின்றது. 


உணவுத் திட்டமிடல் 

உணவு திட்டமிடல் உங்கள் உணவு உண்ணும்  அட்டவணை மற்றும் உங்கள் வரவு செலவுத் திட்டத்தை நிர்வகிக்க உதவும். உங்கள் சாப்பாடு, உங்கள் வாழ்க்கை, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, உங்கள் வீட்டிலுள்ள உணவின் விலை, ஒரு வாரம் மதிப்புள்ள உணவுத் திட்டத்தை திட்டமிடுவது, முன்கூட்டியே செலவினங்களை ஆய்வு செய்வது, நல்ல ஒப்பந்தங்களைக் கண்டறிவது மற்றும் சரியாக எப்படி அறிவது என்பவற்றைச் சார்ந்தது. அதன்படி உங்களது செலவினங்கள் கட்டுப்படுத்தவும் படுகின்றது.

இந்த திட்டமிடலின் மூலம் உணவு மற்றும் அவற்றுக்காக செலவு செய்யும் பணத்தின் விரயமானது பெருமளவில் குறைவடைகின்றது.

 


பருவகால கொள்வனவுகள்.

சில காய்கறிகள் மற்றும் உணவு பதார்த்தங்களானவை பருவ காலங்களில் மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள எதுவாக இருக்கும். எனவே அவற்றினை இனம்கண்டு குறிப்பிட்ட பருவகாலங்களில் அவற்றுக்கான செலவினங்களை திட்டமிட்டு செய்துகொள்வது சிறந்தது.

நீரிழிவு நோயாளர்களுக்கான சிலவகை உணவு பதார்த்தங்கள் பருவம் குறைந்த காலத்தில் அதிக விலைக்கு விற்கப் படுவதுவே பெரும்பாலும் அவர்களது உணவுக்கான செலவின அதிகரிப்பின் காரணி என்பதனால் இவ்வகை பருவகால கொள்வனவு முக்கியத்துவம் பெறுகின்றது.