உற்பத்தியை அதிகரிக்க உறங்குவது அவசியம்

உற்பத்தியை அதிகரிக்க உறங்குவது அவசியம்

உழைப்பினை போன்று முக்கியத்துவம் பெறும் ஓய்வு

02/10/2018 | Views 282

உங்கள் வாழ்கையில் நீங்கள் உழைக்கும் காலக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலமாக கருதப்படுகின்றது. ஆணும், பெண்ணும் சுமார் 16 வயது தொடங்கி 64 வயது வரையான அந்த காலத்திலேயே தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி தமது வாழ்க்கையினை சிறந்த முறையில் கையாளகூடிய காலகட்டம் ஆகும். அந்த பொன்னான காலத்தினை எத்தனை பேர் சரியான முறையில் வாழ்கின்றனர் என்பது தெரியவில்லை.

உழைப்பு மனித வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்ததுவோ அதற்கு சில காரணிகள் பக்கபலமாக இருப்பதுவும் உண்மை. சரியாக நாம் உழைப்பினை மேற்கொள்ள பல காரணிகள் உள்ள போதிலும், ஆரோக்கியமான உடலும் , உறக்கமும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

பொதுவாக உறங்காமல் உழைப்பதையே பலரும் விரும்புவார்கள். உழைப்பதற்காக உறக்கத்தை தொலைத்த பலரையும் தினசரி நாம் காண்பது உண்டு. ஆனால் எமது உழைப்பை அதிகப்படுத்துவதற்கு சிறந்த உறக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

இன்சோம்னியா (உறக்கமின்மை) தரும் ஆபத்துக்கள் .

ஒரு மனிதனுக்கான சராசரி தூக்கத்தின் அளவு 7 முதல் 10 மணித்தியாளங்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகை ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் உடலியக்க நரம்புகள் சீராக செயல்பட்டு, சுரப்புகள் சரியாக சுரப்பிதான் மூலம் உடல் அவயங்கள் சரியாக இயங்கும்.

எவ்வாறாயினும் உறக்கம் மற்றும் ஓய்வின் பின்னரான உற்சாகம் நமது செயலை மேலும் தெம்பூட்டி செயல்பட வைக்கும் என்பது அறியப்படும் உண்மை நிலை ஆகும்.

உறக்கமின்மை இன்சோம்னியா என்பது பலரையும் பெரிதளவில் தாக்க கூடிய நோயாக இனம்காணப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் உழைக்கும் வயதினருக்கே ஏற்படுவதாகவும் அறியப்படுகின்றது. வேலை நிலைகளில் ஏற்படும் மனஅழுத்தம், சிக்கல்நிலை, தொல்லைகள் உள்ளிட்ட காரணிகளின் மூலம் எமது மூளை களைப்படைவதன் மூலம் உறக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆழ்ந்த உறக்கம் என்பது எவ்வாறு எமது தொழில் நிலையினை மேம்படுத்தும் என்பதனை பின்வரும் காரணிகளின் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.


கண் விழிக்கும் நேரத்தை உறுதிப்படுத்துக 

தினமும் கண் விழிக்கும் நேரமானது நாளுக்கு நாள் வித்தியாசப்படும் பொழுது உங்களின் உடல் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குழப்பமடையும் சாத்தியக்கூறுகள் உள்ளன.அத்துடன் உங்கள் தினசரி வேலைகளில் கூட குழப்பத்தினை ஏற்படுத்தவும் செய்துவிடும் என்பது உண்மை ஆகும்.


தினமும் அதிகாலையில்  திடமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கண் விழிப்பதை உறுதி செய்து கொள்வது உங்கள் தினசரி வாழ்வியலில் நேரமாற்றம் ஏற்படுத்தும் தாமத நிலை மற்றும் குழப்பங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
 

படுக்கை அறையினை மாற்றிப்பாருங்கள்.

உங்கள் படுக்கை அறையில் வைத்திருக்கும் சில பொருட்கள் மற்றும் அவை வைத்திருக்கும் இடங்கள் போன்றனவும் உங்கள் உறக்கத்தினை குழப்புவதாக இருக்கும். காற்றோட்டம் சீராக கிடைக்காமல்  இறுக்கமான காட்சி உங்கள் மனநிலையினை கூட இறுக்கமாக வைத்திருக்கும். அத்துடன் உங்கள் உறக்கமும் சீர்கெடும்  .

பொதுவாக நீங்கள் உறங்க செல்வதற்கு முன் சுத்தமாக உங்களை வைத்துக்கொள்வது மட்டுமன்றி உங்கள் அறையையும் சுத்தமாகவும், நல்ல காற்றோட்டம்  கிடைக்க கூடியதாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். வழமையாக உங்கள் பார்வையில் இருக்கும் பொருட்களை சற்று இடம் மாற்றி வைப்பதுடன் புதிய பொருட்கள், படங்கள் போன்றவற்றை உங்கள் படுக்கை அறையில் வைப்பதன் மூலம் உங்கள் மனதில் புது உற்சாகம்  பிறப்பதுடன் ஆழ்ந்த உறக்கமும் ஏற்படும்.

இவ்வகை ஆழ்ந்த உறக்கம் உங்களின் வேலைகளை சிறப்பாக செய்வதற்கு நல்ல மனநிலையினை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

உறங்குவதற்கு மது பயன்படுத்த கூடாது.

ஒரு சிலர் தமக்கு ஆழ்ந்த உறக்கம் வருவதற்கு மது அருந்தும் பழக்கத்தினையும், மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தினையும் ஏற்படுத்தி வைத்திருப்பதனை தற்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. இது முற்றிலும் தவறான விடயம் ஆகும். 

மது அருந்திய பின்னர் மதுவின் சாரம் எமது குருதியில் கலக்கும் பொழுது சிலருக்கு ஒருவகை மயக்க நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு அது உறக்கம் அல்ல. அந்த மயக்க நிலையில் சில உறுப்புகள் இயங்காது, மூளையின் செயற்பாடும் கூட ஸ்தம்பிதமடைய வாய்ப்புக்கள் உண்டு. இது உடல் உறுப்புகளையும் மூளையையும் வெகுவாக பாதிப்பதுடன் எமது வேலைகளை சீராக மேற்கொள்ளவும் விடாது.


திரைப்பார்வை நேரத்தை கட்டுப்படடுத்தவும் 

உங்கள் கணினி திரை மற்றும் தொலைபேசி திரைகளை அதிகநேரம் பார்வையிடுவது உங்கள் கண்களை மட்டுமன்றி மூளையையும் சோர்வடைய செய்யும். உங்கள் கவனத்தில் குவிப்பினை ஈர்க்கும் திரைகள் உங்கள் உடலியக்க செயல்பாடுகளை சீர்குலைக்க செய்வது ஆகும்.

நீண்ட நேர திரைப்பார்வை தரும் வெளிச்சம் கூட உங்கள் கண்களுக்கு கேடு விளைவிப்பதாக ஆய்வுகள் அறியத்தருகின்றன. எவ்வாறாயினும் உங்கள் கண்கள் மற்றும் மூளையின் சோர்வு தரும் மயக்க நிலையானது உங்களின் உறக்கத்தை பாதிப்பது ஆகும். இதனால் சரியான உறக்கம் கிடைக்காமல் நீங்கள் அவதிப்பட நேரிடுவதுடன் உங்கள் வேலைகளும் பாதிப்படையும்.

தொலைபேசி பாவனை மற்றும் கணினி திரை பார்வை நேரத்தை கட்டுப்படுத்துவதுடன் உறங்க செல்வதற்கு முன்னர் அவற்றினை பயன்ன்படுத்தாமல் இருப்பது உடலுக்கும் மூளைக்கும் மட்டுமல்ல உங்கள் வேலைக்கும் நல்லது.


சிறந்த உறக்கம், சிறந்த உடல்நிலை, மூளை சீராக்கல் போன்ற விடயங்களை செய்வதுடன் உங்கள் செயற்பாடுகளை அதிகப்படுத்தக்கூடியது ஆகும். எனவே உங்களின் சில பழக்கங்களின் மூலம்  ஏற்படக்கூடிய இன்சோம்னியா என்ற உறக்கமின்மை நோயினை தவிர்ப்பதுடன் உங்களின் திறமைகளை குறைவடைய செய்யும் தீய விடயங்களை தவிர்த்துக்கொவது நல்லது ஆகும்.