உங்கள் குழுவினரை ஊக்குவிக்க புதுமையான வழிகள் 

உங்கள் குழுவினரை ஊக்குவிக்க புதுமையான வழிகள் 

குழு முயற்சியினை திறம்பட செய்வது எப்படி

03/10/2018 | Views 327

தற்கால செயற்பாடுகள் அனைத்திற்குமான சிறந்த வழியாக கருதப்படுவது குழும செயற்பாடு ஆகும். தனித்திருந்து செய்யும் ஒரு வேலையை விட குழுவாக இயங்குவதன் மூலம் வினைத்திறன் மிக்க வெளிப்பாடுகளை கண்டிப்பாக அடைந்துகொள்ள முடியும் என்ற காரணத்தினால் குழு செயல்பாடுகளையே பல்வேறு பெரு நிறுவனங்கள் தற்போது பெருவாரியாக ஆமோதித்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.

பல துறைகளிலும் உள்ள பல்வேறு திறனாளர்களின் ஒருங்கமைப்பின் மூலம் ஒரு முழுமையானதும், சிறந்ததுமான வெளிப்படுத்தலை நாம் பெற்றுக்கொள்வதற்கு அந்த குழுவில் உள்ள அனைவரும் ஒருங்கே தொழிற்பட வேண்டியது முக்கியத்துவம் பெறுகின்றது. இதனை திறம்பட செய்து கொள்வதிலேயே குழும திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது.

மகிழ்வான தொழிலாளர் ஒருவரின் மூலம் பெறப்படும் வெளிப்படுத்தலானது திறன்மிக்கதாக அமையும் என்பது மறுப்பதற்கு இல்லை. இவ்வகை திறமையானதும், செயல்திறன் மிக்கதுமான வெளிப்படுத்தல்களை பெற்றுக்கொள்வதற்கு எமது குழுவிவில் உள்ள அனைத்து அங்கத்தவர்களை ஊக்கப்படுத்தக் கூடிய வழிவகைகளை இங்கு காணலாம். 

 

நெகிழும் தன்மையினை உருவாக்குவது. 

குழும அங்கத்தவர்கள் வேலை செய்வதற்கு ஏதுவான முறையில் வேலை நேரத்தினையும் , சூழ்நிலையினையும் அமைத்துக் கொடுப்பது திறன்மிக்க வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழி ஆகும். சில சமயங்களில் வீடுகளில் இருந்தும் கூட அங்கத்தவர்கள் வேலையினை செய்வததற்கான இலகுத்தன்மையினையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இடையூறுகள் இன்றி திறனான வெளிப்படுத்தல்களை பெற்றுக்கொள்வது இலகுபடுத்தப்படும்.

சில பணியாளர்கள் தொலை தூரத்தில் இருந்து பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும், ஒரு சிலருக்கு வீடுகளில் குறிப்பிட்ட வசதிகள் இருக்காது. அத்துடன் குழந்தைகள், உடல் கோளாறு  உள்ளிட்ட தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டு குழும உறுப்பினர்களுக்கு ஏற்ப உதவிகளை செய்து கொடுப்பதானது சிறந்த பலனை அடைய செய்யும்.

 

 

செல்லப் பிராணிகளின் வளர்ப்பு 

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட கீழைத்தேய நாடுகளில் உள்ள பெரு நிறுவனங்களால் கூட இந்த முறை பின்பற்றப்படுவது இல்லை. ஆனால் வணிக வெற்றிகள் பலதும் கண்ட மேலைத்தேய நாடுகளின் பெரு நிறுவனங்களில் செல்லப் பிராணிகளை  வளர்ப்பது பெரும்பாலும் வரவேற்கப்படுகிறது.

செல்லப்பிராணிகள் வளர்ப்பு பல வழிகளில் வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக ஆக்குகிறது. இது ஆய்வுகளின் மூலமும் கண்டறியப்பட்ட உண்மையாகும். அமெரிக்காவின் மிக்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் பணியிடங்களில் நாய் வளர்ப்பினை மேற்கொள்வதன் மூலம் பணியாளர்களின் நம்பிக்கையை வளர செய்வதுடன் அவர்களை செயல்திறன் மிக்க வினையூக்கிகளாக  செயப்படுத்தவும் வைக்கலாம் என இனம்  காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


செல்லப்பிராணிகளை வீடுகளில் வளர்ப்பவர்கள் பலரும் தமது பிராணிகளை விட்டு பிரிய மனமில்லாதவர்களாகவே காணப்படுவர். பலரின் தனிமையையும் மன சோர்வினையும் சிதைக்க கூடிய வல்லமையினை செல்லப்பிராணிகள் சிறப்பாக செய்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.


மனஅழுத்தத்தினை குறைவடைய செய்வதில் எமது செல்லப் பிராணிகளுக்கு பெரும் பங்கு உள்ளதனை அறிந்துகொள்ளமுடியும். அத்துடன் இருதய நோயாளிகளை வீடுகளில் தொட்டில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள செய்வது அவர்களில் இதய நோய்களில்  இருந்து பெரும் அழுத்த தவிர்ப்பினை மேற்கொள்கின்றதனை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.


அலுவலகங்களில் நாய் வளர்ப்பது, மீன் தொட்டில் வைத்த்திருப்பது போன்ற நமது ன்மன நிலையினையும் இலகுபடுத்தும் காரியம் ஆகும் என்ற பட்சத்தில் அதன் மூலம் நமது திறன் வெளிப்படுத்தல்கள் சிறப்பானதாக அமைவதனை இனம்காணலாம்.

 

விளையாட்டு அறை செயல்பாடுகள்.

தற்காலத்தில் பல பெரு நிறுவனங்களில் உள்ளக விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையிலும், மன அழுத்தம் மற்றும் வேலைப்பழு என்பனவற்றை குறைக்கும் விதமாக உள்ளக விளையாட்டு திடல் மற்றும் ஓய்வு அறையில் விளையாட்டு உபகரண பாவனை போன்றவற்றை  ஏற்படுத்திக் கொடுத்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. 


வேலைகளில்  இருக்கும் சுமைத்தன்மைக்கு மத்தியில் சற்றேனும் ஓய்வெடுக்கவும், நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் மட்டுமன்றி எமது திறன் வெளிப்படுத்தல்களை அதிகரிக்க செய்வதற்கும் சில விளையாட்டுகள் பெரும் உதவி புரிகின்றன. சதுரங்கம், பில்லியர்ட்ஸ், மற்றும் கேரம் போர்ட்  உள்ளிட்ட விளையாட்டுகள் உங்கள் மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும் என்பது அறியக்கூடியது ஆகும். எனவே இவற்றினை செய்வதன் மூலம் உங்கள் திறன் ஊக்குவிக்கப்படும்.

 

 

அடிக்கடி நிகழும் கொண்டாட்டங்கள்  

மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படும் களியாட்ட நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் போன்ற சக பணியாட்கள் மனதில் உற்சாகத்தினை அதிகரிக்க செய்வதுடன் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இவ்வகை நிகழ்வுகளின் போது ஏற்படும் சந்திப்புக்களானவை பலருக்கும் புதிய அனுபவங்களையும் நல்ல பல விடயங்களையும் ஏற்படுத்த கூடியவை என அறியப்படுகின்றது.

சக ஊழியர்களுடனான உறவை வளர்த்துக்கொள்வதுடன் அவர்களுக்கான முக்கியத்துவம் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புக்களை வேலையாட்கள் என்ற நிலையினை கடந்து அறிந்து தெரிந்து கொள்வதற்கு இவ்வகை ஒன்றுகூடல் நிகழ்வுகள் பெரிதும் உதவுவது என்பது அறியப்படுகின்றது. 

ஊழியர் குழுமத்தின் திடமான ஆரோக்கிய நிலை என்பது உடலளவிலானதாக மட்டுமன்றி மனதளவிலும் திடகாத்திரமாக இருக்கும் பட்சத்திலேயே தொழிலகங்களில் நன்மைகள் அதிகளவில் கிடைக்க கூடியன என்பது அறியப்பட்டும் உண்மை ஆகும் . எனவே சக ஊழியர்களை ஊக்குவிப்பதன் மூலமாக எமது தொழில் குழுமத்தின் திறனை அதிகப்படுத்தி திறமைமிக்க தொழில் வளர்ச்சியினை  அடைந்துகொள்ள முடியும்.