கடன் தொல்லைகள் ஏற்படுவதற்கு காரணிகள் இவைதான் 

கடன் தொல்லைகள் ஏற்படுவதற்கு காரணிகள் இவைதான் 

கடன்கள் தொடர்பில் விடக்கூடிய பிழைகள்

04/10/2018 | Views 409

தற்காலத்தில் பேரளவில் மேலைத்தேய நாடுகளிலும், கீழைத்தேய நாடுகளிலும் உள்ள மக்களின் வருமான செலவு பிரச்சினைகளுக்கு காரணமாக மிக முக்கிய இடத்தினை பெறுவது கடன்கள் ஆகும். அதனிலும் பினைமுறிகள் (Mortgage) மற்றும் அடமானங்கள் போன்ற மனித வருமான விடயத்தில் பெரும் சவாலாக இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.


அடமானங்கள் மூலமான கடன்களானவை இரு வேறு பலன்களை தரக்கூடியவை ஆகும். சொத்துக்கள் , பொறுப்புக்கள் தொடர்பில் எமக்கு சொந்தமான உடைமைகளை வாங்கி அவற்றிற்கு மாதாந்த செலவுகளை செய்வதில் ஏற்பட கூடிய ஒருவித திருப்தி நிலையினை தருவது ஒரு நன்மை என்ற போதிலும், மேலும் மேலும் கடன் சுமையினை சுமப்பதற்கு நாம் உந்தப்படுவதுவே அதனில் இருக்கும் தீய பலன் ஆகும்.

தற்கால வாழ்க்கை முறைக்கு பழகிப்போன பெரும்பாலான மக்கள் அதனை முன் கொண்டு செல்வதற்கான போதுமான வருமானம் இன்றி மேலதிக கடன்களை பெற்று வாழ்நாள் முழுதும் கடன்களை செலுத்தும் ஒரு நிலையினை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் முறிகளும் அடமானங்களுமே அவனது பெரும்பாலான செலவின அம்சமாக காணப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.

பெரும்பாலும் கடன் பெறுபவர்கள் அதனை திருப்பி செலுத்துவதற்கு பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. கடன்களை பெரும் பொழுது அவர்கள் விடக்கூடிய சிற்சில தவறுகளே அவர்களை பாரிய பொறுப்பு சுமைகளில் தள்ளி விடுகின்றன. இவ்வாறு கடன் பெறுபவர்கள் விடக்கூடிய தவறுகளை அறிந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றினை எவ்வாறு தீர்ப்பது என்பதை இங்கு அறியலாம்.

 

பெற்றுக்கொண்ட கடன் தொடர்பான விபரங்களை முழுமையாக அறியாதது.

எமது பண தேவைகளுக்காக நாம் கடன்களை அவசரமாக பெற்றுக்கொள்ளவே  நினைப்பது  உண்டு. அந்த தருணத்திலான பிரச்சினையை நிவர்த்தி செய்யப்படுகின்ற கடன்களானவை நம்மை மேலும் நிவர்த்திக்க முடியாத பிரச்சினைகளுக்கு தள்ளி விடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அவ்வாறே நாம் கடன்களை பெற்றுக்கொள்ளும் அந்த கடன் தரக்கூடிய சலுகைகள், நிபந்தனைகள், வட்டிவீதம், காலக்கெடு உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்தாமல் கடன் முதலை மாத்திரம் பெற்றுக்கொள்வதுடன் அதன் விளைவுகள் பற்றிய அவதானம் இல்லது இருப்பதுவே அனைத்துவித சுமைகளுக்குமே முழு காரணி ஆகும் என கருதப்படுகின்றது .
   

வரவு செலவுகள் தொடர்பான அவதானம் இன்மை.

உங்கள் நிலையான வருமானம் மற்றும் அதற்கான இதர செலவுகள் தொடர்பில் விடக்கூடிய பிழைகள் உங்களை கடன் சுமைகளுக்குள் தள்ளி விடும் என்பது நிஜமான உண்மை. வருமானத்திற்கும் செய்யப்படுகின்ற செலவுகளுக்காக கடன் பெறுவதானது எமது பணக்கொள்கைகள் தொடர்பில் எமது அவதானமின்மையினையே வெளிப்படுத்துகின்றன.

சில சமயங்களில் ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவினங்களுக்காக நாம் ஏற்கனவே எமது வருமானங்களை ஒதுக்கி வைக்காமையும் கூட சிக்கல் நிலைகளுக்கு நாம் தள்ளப்பட காரணம் ஆகின்றது. ஆடம்பர செலவுகள் பின்னர் பணம் எஞ்சாது விடும் சந்தர்ப்பங்கள் முக்கிய தேவைகளுக்கு கடன் பெற தூண்டுதலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கடன் கொடுத்தோர் மீதான அதீத அம்பிகை.

முக்கிய தேவைகளுக்காக சில நெருக்கமானவர்களிடம் கடன் பெற வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்படும். அத்தகைய சந்தர்ப்பத்தில் சிறுதொகை கடன் தொகைக்காக எமது பெறுமதிமிக்க ஆவணங்கள் எதையேனும்  நாம் அடமானமாக வைக்க நேரிடுகின்றது. கடன்கொடுத்தோர் மீதான அதீத நம்பிக்கையின் பெயரில் நாம் எடுக்கும் இந்த அவசர முடிவு பல சமயங்களில் எம்மை பெரும் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளிவிடுகின்றன.

பல கடன் கொடுத்தோர் எமது அவசர நிலைகளை சாதகமாக பயன்படுத்தி சிறுதொகை பணத்தினை மாத்திரம் நமக்கு கடனாக கொடுத்து அதற்க்கு வட்டி அறவீடினை அதிகளவில் அறவிட்டு எமதுகொடுக்கடன் சுமையினை அதிகப்படுத்தியமை பெரும்பாலும் நிகழ்கின்றன. இவ்வகை சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தீய விளைவுகளை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பிலான அவதானம் இன்மையின் காரணமாக பலரும் மரணத்தினை தழுவியுள்ளமை அறியப்படும் உண்மை ஆகும்.

 

காலக்கெடு மற்றும் திருப்பி செலுத்தும் தொகை பற்றிய ஆரம்ப முடிவுகள்.

கடனை பெரும் தருணத்தில் அவற்றினை திருப்பி செலுத்தும் காலக்கெடு மற்றும் தொகை அளவினை எமது தகுதிக்கு ஏற்றார் போல நாம் தீர்மானிக்க தவறுவதால் பல சிக்கல்களுக்கு இலக்காக நேரிடுக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் எமது வருமானத்தினை எதிர்பார்த்து கடன்களை அவசர தேவைகளுக்கு பெற்றுக்கொள்வதுடன் அவற்றினை திருப்ப செலுத்த எடுக்கும் தீர்மானங்கள் பல சமயங்களில் எமது திட்டங்களுக்கு மாறாக செயல்பட்டு விடுவதனை காணக்கூடியதாயுள்ளது.

எதிர்பாரா செலவினங்கள் நம்மை ஆட்கொள்ள நேரும் பொழுது நாம் அடைந்த கடன்களை திரும்பி செலுத்த தீர்மானித்த ஒப்புதலுக்கு இசைவாக எம்மால் நடந்துகொள்ள முடியாமல் போய்விடுகின்றன. அத்துடன் வருமான ஒதுக்கம் எமது செலவுகளுக்கு மேலாக இருந்தும் விடுகின்றன.

திரும்பல் செலவுகளை தீர்மானிக்கும் போதான இவ்வகை எதிர்பாரா தேவைகளுக்கும் சேர்த்து நாம் எமது வருமானத்தினை ஓதுவக்கி வைப்பதன் மூலம் ஓரளவேனும் இவ்வகை சிக்கல் நிலையில் இருந்து தப்பிக்கலாம் என அறியலாம்.

 

 


பலருக்கும் இருக்க கூடிய கடன் பிரச்சினைகளின் தாக்கத்தினால் மரண சம்பவங்கள் கூட நேரிடுகின்றன. எமக்கான பொறுப்பு சுமைகளை சுமக்க தவருகின்ற நிலை ஏற்படுவது பல சந்தரங்களின் எமது கவனயீன தவறுகளே காரணம் என்பதனை அறிந்து கொள்வது மாத்திரம் அன்றி அவ்வகை இன்னல்களுக்கு ஆளாகாமல் தப்பிப்பதற்கு எம்மை தயார் நிலைக்கு வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.