உங்கள் மாத வருமானத்தை மும்மடங்காக்கிட இவற்றை பின்பற்றுங்கள்.

உங்கள் மாத வருமானத்தை மும்மடங்காக்கிட இவற்றை பின்பற்றுங்கள்.

நுட்பமான மாற்றங்களின் மூலம் பெரியளவு வருமானங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள்

05/10/2018 | Views 484

தொழில் முனைவோராக, தொழிலாளியாக நமது மாத வருமானத்தை மட்டும் பெறக்கூடிய நமது அன்றாட வாழ்க்கை முறையானது சுழலும் சக்கரத்தில் சிக்கிக்கொண்டதை போன்றது ஆகும். அதன் சுழற்சிக்கு நம்மை ஈடுபடுத்திக்கொண்டு அதிலிருந்து மீளவும் முடியாமல் , நிறுத்தவும் முடியாமல், எதுவித மாற்றங்கள் நன்மைகள் இன்றி சுழன்றபடியே  இருப்பதனை எமது வாழ்நாளில் நாம் உணர்ந்து இருப்போம்.

ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள நினைத்த போதிலும் அதற்கான சரியான வருமான அதிகரிப்போ அல்லது மேலதிக கிடைப்பனவுகளோ நமக்கு இல்லாமல் போவதால் பல நேரங்களில் பல்வேறுபட்ட சிக்கல் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருப்போம். 

எமக்கு வேண்டிய மாற்றங்களை செய்வதற்கும், எமது வருமான அளவினை அதிகரிப்பதற்குமான செயற்பாடுகள் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவற்றுக்கான பிரதிபலன்கள் நாம் சரிவர பெற்றிருக்க மாட்டோம். அவ்வகையில் அன்றி சிறிய முயற்சிகள் மாற்றங்களின் மூலமாக எமது வருமான அதிகரிப்பினை மும்மடங்காக மாற்றிக்கொள்வதற்கான சில அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்.

உங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளுங்கள். 

ஒருவரின் நடத்தை, செயல்கள் உள்ளிட்ட விடயங்களை வைத்து அவரவர்களின் அணுகுமுறைகளை அடுத்தவர்கள் அறிந்துகொள்வார்கள் என்பது வழமை. என்னதான் சிறந்த அணுகுமுறைகளை கொண்டிருப்பினும் எமது வருமான மாற்றங்களை மேற்கொள்ள முடியாத பட்சத்தில் அவற்றினை மாற்ற வேண்டியது கட்டாயமானது.

வெற்றியாளர்களை எப்பொழுதும் தமது வாழ்வில் அனைத்துமே சாதகமாக அமைந்து விடுவது இல்லை. மாறாக தமக்கு சாதகமான முறையில் வெற்றிகளை மாற்றி அமைத்துக்கொள்வதில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதுவே உண்மை. தாமாக முன்வந்து எமது வருமான அதிகரிப்பிற்கு ஏதேனும் செயல்களை எமது அன்றாட அணுகுமுறையின் அடிப்படையில் இருந்து மாற்றும் பட்சத்திலேயே எமது திறன் வெளிப்படுத்தப்பட்டு வருமானமும் மும்மடங்காக அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

தாமாகவே பொறுப்புக்களை ஏற்காதீர்கள்.

ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு இருக்கும் பண்பானது தமது சக்திக்கு மீறிய பொறுப்பினை தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொள்வது ஆகும். பிறரின் தவறுகளையும் கூட தமது பிழைகளாக ஏற்றுக்கொள்வதில் சிலரது நற்பண்புகள் இருக்கும். ஆயினும் அது மிகப்பெரும் தவறு. பொறுப்புக்கள் தேவையற்று சுமத்தப்படும் பொழுது அவற்றினை கட்டாயமாக சுமக்கும் நிர்பந்தத்தில் உள்ளன நிலையில் எமது வருமான முன்னேற்றம், பிற முன்னேற்றகரமான செயல்களில் எம்மால் ஈடுபட முடியாமல் போய்விடும்.

அத்துடன் சில தேவையற்ற கடன்களை பெற்று, அடமான செலவுகளை மேற்கொண்டர் அவற்றினை திருப்பி செலுத்துவதற்கு நிர்பந்திக்கப்பட்டு விடுவதனால் வேறுவித அணுகுமுறைகளை எமது வருமானத்தை உட் செலுத்தவோ, வருமான அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுக்கவோ முடியாமலும் போய்விடும் என்பதனை அறிந்துகொள்ளுங்கள். எனவே தேவையற்ற பொறுப்புக்களை தாமாகவே முன்வந்து ஏற்காமல் இருப்பதுவும், வேண்டாத பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதுவும் உங்கள் வருமானத்தை பாதுகாப்பது மட்டுமன்றி அதனை மும்மடங்காக பெருக்கவும் உதவும்.

நெகிழும் தன்மையினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

சில செலவுகள் மற்றும் செயற்பாடுகளுக்கு ஒதுக்கமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஏற்கனவே ஒதுக்கி வைப்பதுடன் அத்தனையும் தாண்டி மேலதிகமாக செலவுகளோ அல்லது புத்துருவாக்கங்களோ மேற்கொள்வதினை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்றால் அது உங்கள் வருமானத்தினை எந்த வகையிலும் அதிகப்படுத்தாது . 

புதிய முயற்சிகளை யோசிக்கவும், வருமானத்திற்கான புதுப்புது விடயங்களை பரிசீலிக்கவும் செலவு செய்வதற்கு தயங்கிட கூடாது. சில இழப்புக்கள் மூலமே பெரும் வெற்றியினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது அறியப்படும் உண்மையை ஆகும். எனவே செலவுகளை மேற்கொள்வதிலும், அதற்கான வருமானங்களை ஈட்டிக்கொள்வதிலும் நீங்கள் கண்டிப்பாக நெகிழும் தன்மையினை கொண்டு இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.