மரவள்ளிக் கிழங்கு, மறதிக்கும் மருந்து.

மரவள்ளிக் கிழங்கு, மறதிக்கும் மருந்து.

26/09/2015 | Views 3904

மரவள்ளியில் கபோவைதரெட் அதிக அளவில் பெரிய ஆதரமாக கிடைக்கின்றது, மற்றும் இதில் கால்சியம் கணிசமான அளவும், நார்ச்சத்து உணவும், இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ்,  வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் சி, என்பனவும்  பொட்டாசியம், விட்டமின் கே  அதிகமாகவும் நிறைந்ததுள்ளது.

இதில் சுக்ரோஸ் என்னும் சர்கரைச் சத்து அதிகமாகவும் அமைலேஸ் என்னும் சர்க்கரைச் சத்து கணிசமாகவும் உள்ளனது. 

இதில் கொழுப்புச்சத்து குறைவாகவும் புரதச் சத்து அதிகமாகவும் நிறைந்துள்ளது. 

குளூடன் இல்லாத புரதச்சத்து உள்ளதால் குளூடன் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை மருந்துப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். 

இதிலுள்ள நார்ச்சத்தானது இதய நோய்கள், மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்துக்களை குறைப்பதுடன், மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது

இது நரம்பு அமைப்புகளை சீராக பேணுவதுடன் மன அழுத்தம், பதட்டம் மற்றும் எரிச்சல் கொண்ட தன்மைகளை ஒழிக்கவும் உதவுகின்றது.

அத்துடன் அல்சீமர் என்னும் ஞாபகமறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது.

இது இதயத்துடிப்பு சீராவதற்கும் ரத்த அழுத்தம் சரியாக இருக்கவும் உதவுகிறது.

இதை கோதுமை மாவுக்கு பதிலாக பயன்படுத்த முடியும். மற்றும் கேக் போன்ற உணவுகளில் சேர்த்தும் மற்றும் இனிப்பு பண்டம் செய்தும் கழி கிண்டியும் சாப்பிடலாம். மற்றும் இதனை சிறு துண்டுகளாக சீவி பொரியல் செய்தும் மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.