சாதனையாளர்கள் சொல்லமறுக்கும் சொற்கள் இவைதான்

வெற்றிக்கனியை சுவைத்திட வேண்டும் என்றால் உங்கள் சுய அழிவுக்கான சிந்தனைகளை தகர்த்து எறியுங்கள்
சாதனையாளர்கள் சொல்லமறுக்கும் சொற்கள் இவைதான்

தொழில் ரீதியிலும் , வாழ்க்கையிலும் சாதனையாளர்களை நீங்கள் எப்போதும் பின்பற்றவே விரும்புவீர்கள், அவர்களின் புறத்தோற்றத்தினை போன்று நீங்களும் மாறிக்கொள்வதை கூட செய்திருப்பீர்கள். அந்த நபர் போன்ற நடை, உடை,பாவனை மற்றும் ஒவ்வொரு விடயங்களையும் அணுவணுவாக ரசித்து நீங்களும் அதனை வாங்கிட முயற்சித்தும் இருக்கலாம்.

ஒரு விளையாட்டில் இருக்க கூடிய வெற்றி தோல்வியை போலவே உங்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலைகளிலும் கூட வெற்றியும் தோல்வியும் இருக்கும். அதனை அங்கீகரிக்கும் மனபக்குவத்தினை நீங்கள் வளர்த்துக்கொள்வது அவசியமாகின்றது.

உலகின் பெரும் பணக்காரர்கள் தாம் சம்பாதித்துதான் வாழ வேண்டியது அவசியம் இல்லை என்ற போதிலும் அவர்கள் தமது உழைப்பை நிறுத்துவதில்லை. இதற்கான காரணம் அவர்கள் மேலும் பணம் ஈட்டுவது அல்ல. அவர்களது தனித்துவத்தையும் அடையாளத்தையும் அனைவரிடமும் நிலை நிறுத்துவதற்கே ஆகும்.

சாதனையாளர் ஒருவரைப்போன்று நீங்களும் மாறிட வேண்டும் என்றால் அவர் பின்பற்றிய விடயங்களை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பது அவசியம். அந்த வகையில் பொதுவெளிகளில் சாதனையாளர்கள் சொல்ல விரும்பாத வார்த்தைகள் எவை என்பதனை அறிந்துகொள்வதனால் நீங்களும் வாழ்க்கையில் முன்னேறலாம் 

பிறகு செய்கின்றேன் (“I’ll do it later.”).

"Procrastination is for the weak willed" . என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது உண்டு. அதாவது எந்தவொரு விடயத்தையும் தள்ளிபோடுவதானது தோல்விக்கான அறிகுறியாகவே உள்ளது. சாதனையாளர்கள் இவ்வாறு எந்த விடயத்தையும் தள்ளிபோடுவதை விரும்புவதில்லை. தமது நேரத்தினை முகாமை செய்துகொள்வதுடன் தமது அன்றாட வேலைகளுக்கு மத்தியில் கூட வேலைகளை செய்து முடிப்பதனை இனம் காணலாம். இதுவே சாதனையாளர்களுக்கான சிறந்த பண்புகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றது.

குறிப்பிட்ட வேலையின் முக்கியத்துவத்தினை பொறுத்து அவற்றினை செய்துமுடிப்பதில் சாதனையாளர்கள் மும்முரம் காட்டுவார்கள். அவ்வாறே தேவையற்ற விடயங்கள் எனும் பட்சத்தில் முழுமையாக அவற்றினை செய்யாமலும் விடுவார்களே தவிர பிறகு செய்யலாம் என்ற தள்ளிப்போடும் சகலாச்சரம் அவர்களிடையே என்றும் இருக்காதா பண்பு.

விட்டுக்கொடுக்கின்றேன்(“I give up.”).

பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கல் ஜோர்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.( “Obstacles don’t have to stop you. If you run into a wall, don’t turn around and give up. Figure out how to climb it, go through it, or work around it.” ) "தடைகள் என்றும் உங்களை தடுப்பது இல்லை. நீங்கள் முன்னேறும்பாதையில் தடுப்புக்கள் இருந்தால் அதனை கண்டு மீண்டும் திரும்பி செல்ல கூடாது. மாறாக அந்த தடுப்பினை தகர்த்து அல்லது அதனை எவ்வாறு கடக்கலாம் என்று எண்ணி உங்கள் முன்னேற்றத்தினை தொடர வேண்டும்". இது வெற்றிக்கான துல்லியமானதொரு கோட்பாடு ஆகும்.

சாதனையாளர்கள் தமது முயற்சியில் தோல்வியினை தழுவலாம், ஆனால் விட்டுக்கொடுப்பதை கண்டிப்பாக செய்வது இல்லை . உலகின் முன்னணி போட்டி நிறுவனங்கள் இரண்டினை இதற்கு உதாரணமாக கொள்ளலாம் .

பிரபல ஆப்பிள் நிறுவுனர் ஸ்டிவ் ஜொப்ஸ் அவரது ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ஒருமுறை வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் அந்த இடத்திற்கு வந்த ஜெப் பெஸோஸ் வடிவமைத்த அமேசான் Fire Phone பாரிய நட்டத்தினை அந்த கம்பெனிக்கு அளித்தது. இதன்பின்னர் ஸ்டிவ் ஜொப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் மீள்பிரவேசம் செய்து தமது வெற்றிகரமான ஆப்பிள் போன்களை அறிமுகம் செய்தார். அவ்வாறு இருக்க இன்னொருபுறம் சூழலைமாசுபடுத்தாது உபயோகிக்கும் தயாரிப்புக்களை வெளியிட்டு முன்னணி சாதனையாளராக மிளிர்கிறார். 

இது என் தவறல்ல (It’s not my fault).

சாதனையாளர்கள் யாரும் பெரிய பதவிகளையோ அல்லது பொறுப்புக்களையம் எடுத்துக்கொள்வதற்கு விரும்புவதில்லை. அத்துடன் பொறுப்புக்களை மற்றவர்களுக்கு சாட்டுவதனையும் விரும்புவதில்லை. எப்பொழுதும் பிறரை ஊக்குவிப்பார்களே தவிர சாடுவது இல்லை. இது அவர்களின் சிறந்த பண்பினை வெளிப்படுத்தும் விடயம் ஆகும்.

திருப்திகரமாக உள்ளது (“I’m satisfied.”) 

எந்த சாதனையாளனுக்கும் போதும் என்ற எண்ணம் தோன்றுவதே இல்லை. மேலும் மேலும் முன்னேறுவதற்கான அவனது தூண்டுதலே பல சாதனைகளை அவன் மேற்கொள்வதற்கு எதுவாக உள்ளது. மாறாக தாம் அடைந்தது போதும் என்ற நிலையினை எப்போது அவன் உணருகின்றானோ அந்த நொடியே அவனது இறுதி நிலையாக இருக்கும்.

வெற்றியோ அல்லது தோல்வியோ இடைவிடாது முயற்சிப்பதுவே வெற்றியாளனின் உயரிய பண்பில் ஒன்றாகும். இவ்வகை திருப்தியற்ற நிலையே சாதனைகளை மென்மேலும் படைத்துக்கொள்ள தூண்டும் காரணி ஆகும்.

நான் சிறியவன். எனக்கு இன்னு��் காலம் உண்டு ( “I’m young, and have plenty of time.”)

உங்களின் குறிக்கோள்களை அடைந்துகொள்ள நேரம் காலம் பார்ப்பது என்பது மிகவும் தவறானது . ஒவ்வொரு நொடியும் உங்களின் இலக்கினை அடைவதற்கெனவே படைக்கப்பட்டுள்ளது.
வெற்றிபெறுவதற்கென சாதனையாளர்கள் கொண்டுள்ள ஆயுதம் அவசரத்தன்மை ஆகும் 

Article By TamilFeed Media, Canada
1097 Visits

Share this article with your friends.

More Suggestions | Business

Advertise Here | 6479296626