கண்டிஷனர் திரவத்தின் மூலம் கிடைக்கும் கண்டிஷன் இல்லா உதவிகள்

பல விதமாக பராமரிப்பு தரும் கண்டிஷனர்கள்

எமது வீடுகளில் இருக்கும் அழகு பராமரிப்பு பொருள்களில் முக்கியம் வாய்ததாக கண்டிஷனர்கள் கருதப்படும். தலைமுடி மற்றும் சரும பராமரிப்புக்கு இப்போது இன்றியமையாத ஒரு நிவாரணியாக கண்டிஷனர்கள் கருதப்பட்டு வருகின்றன.

இவ்வகையான கண்டிஷனர்கள் மூலம் நாம் ஏதேனும் ஒரு வேலையை மட்டுமே இதுவரை செய்து வந்திருப்போம், ஆயினும் கண்டிஷனர்கள் மூலம் சில பராமரிப்பு வேலைகளையும் , பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் செய்யலாம் என்பதை அறிவீர்களா? 

கண்டிஷனர்களை நாம் எவ்வாறு பலவிதமாகவும் , பல தேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம் . 


பாதணிகளை பளபளக்க செய்தல் 

நீங்கள் அணியும் சப்பாத்து காலனிகளில் மதிப்புடன் கூடிய வெள்ளை கோடுகள் அசிங்கமாக காணப்பட்டால் அதனை வீட்டில் உள்ள முடிகளுக்கான கண்டிஷனர்களை கொண்டே எளிதில் நீக்கலாம்,எனவே வீட்டில் சப்பாத்து போலிஷ் செய்யும் க்ரீம்/நீர்மம் காலியாகிவிட்டால், ஹேர் கண்டிஷனர் கொண்டு பளபளக்க செய்யலாம்.

துணிகளின் சுருக்கத்தை நீக்கிடும் 

பொதுவாக சலவை இயந்திரங்களில் போட்டு துவைக்கும் ஆடைகள் துவைத்த பின் அதன் நிலை இழந்து சுருங்கி கந்தலாக மாறிவிடும், எனவே அதன் பொலிவும் மங்கி விடும், எனவே 
ஒரு வாளி நீரில் 1 டேபிள் ஸ்பூன் கண்டிஷனர் சேர்த்து கலந்து, அதில் சுருங்கிய துணியைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் பிழிந்து காயப் போடுங்கள். இதனால் துணி சுருக்கம் போய்விடும். 

கைகளை சுத்தப்படுத்தும் ஹாண்ட் வாஷ் (HAND WASH)

ஹேர் கண்டிஷனர் உங்களது தலைமுடியை மட்டும் தான் மென்மையாக்கும் என்றும் நினைக்காதீர்கள். கையால் துணியைத் துவைத்த பின், சிறிது கண்டிஷனரை கையில் விட்டு தேய்த்துக் கழுவுங்கள். இதனால் துணி சோப்பால் கைகள் வறட்சியடைவதைத் தடுத்து, கைகளைப் பட்டுப் போன்று மென்மையாக வைத்துக் கொள்ளலாம். 

மோதிரத்தை கழற்றிட யுக்தி 
கைவிரலில் மோதிரம் சிக்கிக் கொண்டதா? அதைக் கழற்ற முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் சோப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக கண்டிஷனரை மோதிரத்தைச் சுற்றி தடவிக் கொண்டு, பின் மென்மையாக கழற்றுங்கள். இதனால் மோதிரம் எளிதில் வெளியே வந்துவிடும். 


முக ஒப்பனையை அகற்றிக்கொள்ள மேக் அப் ரிமூவர் (MAKEUP REMOVER)

உங்களிடம் நல்ல தரமான மேக்கப் ரிமூவர் இல்லையா? வீட்டில் ஹேர் கண்டிஷனர் உள்ளதா? அப்படியானால் கவலையை விடுங்கள். ஹேர் கண்டிஷனரைக் கொண்டே மேக்கப்பை நீக்குங்கள். இதனால் மேக்கப் எளிதில் வந்துவிடும். மேலும் சருமமும் பாதிக்கப்படாமல் சுத்தமாகவும் பட்டுப் போன்றும் இருக்கும். மேக்கப் பிரஷ் க்ளீனர் உங்கள் மேக்கப் பிரஷ் மிகவும் அழுக்காக உள்ளதா? அதை எளிய முறையில் சுத்தம் செய்ய வேண்டுமா? அப்படியென்றால், ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இதனால் மேக்கப் பிரஷ் பளிச்சென்று புதிது போல் காட்சியளிக்கும். 

சத்தம் போடும் கதவுகளின் சத்தத்தை குறைக்க 

கதவுகளில் இருந்து சப்தம் வருகிறதா? இதற்கு நீங்கள் க்ரீஸ் பயன்படுத்துவீர்களா? க்ரீஸ் பயன்படுத்தி கதவுகளின் அழகைக் கெடுப்பதற்கு பதிலாக, குளியலறையில் உள்ள ஹேர் கண்டிஷனரை கதவுகளில் தடவுங்கள். இதனால் கதவுகளில் இருந்து வரும் சப்தங்கள் உடனே போய்விடும். 

நகங்களின் முனைகளை அழகாக்க 

அசிங்கமான விரல் நகங்கள் உங்கள் விரல் நகங்களின் முனைகளில் அசிங்கமாக தோல் வெளியே தெரிகிறதா? அதைப் போக்கி உங்கள் விரல் நகங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு அதை பிடுங்குவதற்கு முன்பு, ஹேர் கண்டிஷனரை விரல் நகங்களில் சிறிது நேரம் தேயுங்கள். இதனால் விரல் நகங்கள் அழகாக காட்சியளிக்கும். 


முகச்சவரமாகும் ஷேவிங் ஜெல்(SHAVING GEL) போன்றது.

உங்கள் வீட்டில் திடீரென்று ஷேவிங் ஜெல் தீர்ந்துவிட்டதா? அதை வாங்குவதற்கு நேரமில்லையா? அப்படியானால் வீட்டில் உள்ள ஹேர் கண்டிஷனரை ஷேவிங் ஜெல்லாக பயன்படுத்துங்கள். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, சருமம் பட்டுப் போன்று அழகாக இருக்கும். 

தலை முடி வறட்சியை குறைக்கும் 

 உங்கள் தலைமுடி அசிங்கமாக வறண்டு குருவிக்கூடு போன்று காணப்படுகிறதா? அப்படியானால் கண்டிஷனரை தலை ஓட்டில் (SCALP) படாமல், தலைமுடியில் மட்டும் தடவி பின் நீரால் தலைமுடியை அலசுங்கள். இதனால் தலைமுடி நன்கு பட்டுப்போன்று மென்மையாகவும் அழகாகவும் காட்சியளிக்கும். தலைமுடி பொலிவிழந்து காணப்படுகிறதா? உங்கள் பொலிவிழந்த முடியின் தோற்றத்தை சிறப்பாக காட்ட, ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் தலைமுடி நல்ல தோற்றத்துடன் அழகாகவும், பொலிவான தோற்றத்திலும் காணப்படும். 

அடைப்புக்களை நீக்கிவிடும் 

வீட்டு சமையலறையில் அழுக்கு நீர் செல்லும் குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டிருந்தால், அந்த குழாய்களில் சிறிது ஹேர் கண்டிஷனரை விடுங்கள். பின் சிறிது நேரம் கழித்து நீரை ஊற்றுங்கள். இதனால் அடைப்புக்கள் நீங்கி, குழாய்களில் நீர் தடையின்றி வெளியேறும்.

துணிகள் வாசனையுடன் இருக்க 

 துணி நறுமணம் என்ன தான் துணி துவைத்தாலும், நீங்கள் துவைத்த துணி நல்ல நறுமணத்துடன் இல்லையா? அப்படியானால், துணி நல்ல மணத்துடன் இருக்க, நீரில் சிறிது ஹேர் கண்டிஷனரை ஊற்றி பின் அந்நீரில் துணியை ஒருமுறை அலசுங்கள். இதனால் நீங்கள் துவைத்த துணி நல்ல மணத்துடன் இருக்கும��. 

துருவை போக்கிட யுக்தி

வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் துரு பிடித்து அசிங்கமாக காட்சியளிக்கிறதா? அதை நீக்கி பொருளை பளிச்சென்று காட்ட, ஹேர் கண்டிஷனர் கொண்டு துரு பிடித்த இரும்பு பொருட்களைத் துடையுங்கள். இதனால் துரு எளிதில் நீங்கி, பொருட்களும் பளிச்சென்று காணப்படும். 

சருமத்தை பராமரிக்க உதவும் 
ஒரு வாளி முழுவதும் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிது ஹேர் கண்டிஷனரை சேர்த்து கலந்து, குளித்தால், வறண்டு அசிங்கமாக காணப்படும் சருமம், மென்மையாகவும், பட்டுப் போன்றும் அழகாக காட்சியளிக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

உலோக பொருட்களை பளபளக்க செய்தல் 
உலோக பொருட்களை அழகாக பளபளக்க வைக்க வேண்டுமா? அப்படியானால் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இதனால் உலோகபொருட்கள் பளபளவென்று மின்னுவதோடு, புதிது போன்றும் காட்சியளிக்கும். முக்கியமாக ஹேர் கண்டிஷனர் பயன்படுத்திய பின், சுத்தமான துணியால் துடைத்துவிடுங்கள். 


காயங்கள் மீதான பிளாஸ்த்தர் அகற்ற 
காயம் ஏற்பட்ட இடத்தில் ஒட்டியிருக்கும் பிளாஸ்த்தர்பாண்ட் எயிட் காலை அகற்றமுடியவில்லையா?அப்படியானல் அவற்றின் முனைகளில் சிறிது கண்டிஷனரைத் தடவுங்கள். இதனால் முனைகள் தளர்ந்து எளிதில் வெளியேற்றும் வகையில் வந்துவிடும். மேலும் வலி இல்லாமலும் இருக்கும். 


சிக்கலில்லாமல் ஜிப்பை கழட்டலாம் 
உங்கள் வீட்டில் இருக்கும் பையின் ஜிப் அல்லது ஜீன்ஸ் பேண்டின் ஜிப் சிக்கிக் கொண்டால், அதை எளிதில் சரிசெய்ய எண்ணெய் அல்லது மெழுகிற்கு பதிலாக, ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இதனால் சிக்கிய ஜிப் எளிதில் வெளிவந்துவிடும்.

Article By TamilFeed Media, Canada
5714 Visits

Share this article with your friends.

More Suggestions | Health