முளை கட்டிய தானிய உணவுகள்.

முளை கட்டிய தானிய உணவுகள்.

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். இதை ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது உட்கொண்டு வாருங்கள். அப்போது நீங்கள் ஆரோக்கியத்தை உணர்வீர்கள்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அதிகளவில் கிடைக்கிறது.

  • முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும்.
  • முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் பருமன் கூடும், கண்பார்வை மேம்படும்.
  • முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
  • முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.
  • முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.
  • எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.
Article By TamilFeed Media, Canada
5006 Visits

Share this article with your friends.

More Suggestions | Health