உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிற கிரீன் டீ (Green Tea ) பற்றிய தகவல்.

கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது.

முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது.

கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள்.

டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்யவேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது.

இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம், தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா? அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி (Ante-Aging) இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) தோல் சுருக்கத்தைப் போக்குகிறது.

வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் (Acidity) இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் (Caffeine) என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் காஃபியில் (Coffee) இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை (Green Tea) தைரியமாக நாம் அருந்தலாம்...!

Article By TamilFeed Media, Canada
8014 Visits

Share this article with your friends.

More Suggestions | Health