தனிப்பயனார் விவரங்கள் திருடப்பட காரணம் யார் தெரியுமா

பாதுகாப்பு தொடர்பில் தொடரும் வதந்திகளை நம்பலாமா? கூடாதா?

கடந்த தினங்களாக முகநூல் தொடர்பில் பல்வேறுபட்ட சர்ச்சை தகவல்கள் தொடர்ந்தும் வெளியானவண்ணம் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. தனிப்பயனார் கணக்கு விபரங்கள் களவாடியதாக பேஸ்புக் நிறுவுனர் தாமாகவே முன்வந்து செய்தி வெளியிட்டமையும் இதனை தொடர்ந்து வந்த அடுத்தடுத்த சர்ச்சை தகவல்களும் முகநூல் பாவனையாளர்களை கதிகலங்க செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வகையாக ஒவ்வொரு தனிப்பயணர்களின் தனிப்பட்ட தகவல்கள் கவரப்பட்டமை தொடர்பில் முகநூல் மீது பயனர்களின் அதிருப்த்தி வெளியானவண்ணமிருப்பது அறிந்ததே.இதனால் பயனர்களின் நம்பகத்தன்மையை முகநூல் இழக்கும் அபாயம் உள்ளதனை காணக்கூடியதாகவே உள்ளது.

இவை ஒரு புறம் இருக்க இந்த தகவல்கள் கவரப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய நிர்கதிக்கு பேஸ்புக் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளமை அறிந்ததே. அவ்வாறே பேஸ்புக் அனுமதித்த செயலிகள் பின்னணியின் மூலமாக மறைமுகமாக தரவுகள் கவரப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

  • பாதுகாப்பு தொடர்பில் தொடரும் வதந்திகள்.

இவ்வாறு பேஸ்புக்கின் தனிப்பயனார் கணக்கின் பாதுகாப்பின்மை தொடர்பில் தகவல் வெளியானதை தொடர்ந்து முகநூலில் பல்வேறு செய்திகள் உளவப்பட்டமை காணக்கூடியதாக உள்ளது. அதில் குறிப்பிட்டு கூறக்கூடியது Bff முறைமை .

 

  • Bff தொடர்பான செய்தி தகவல். 

பேஸ்புக் பக்கங்களில் கருத்துப்பெட்டிக்குள் (Comment Box) Bff என்று தட்டச்சு செயும்போது அது பச்சை நிறமாக மாறிவந்தால் உங்களில் தனிப்பயனார் கணக்கு பாதுகாப்பாக உள்ளது எனவும், அவ்வாறு மாறாத பட்சத்தில் உங்கள் தரவுகள் களவாடப்பட்டதாகவும், மேலும் கடவுசொல்லினை மாற்றிக்கொள்ளும்படி கோரப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அதனை தொடர்ந்து பல முகநூல் பாவனையாளர்கள் Bff என்று தட்டச்சு செய்து பீதியில் உறைந்தமையை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  • உண்மையில் Bff என்பது என்ன?

Bff என்று குறிப்பிடப்படுவது BEST FRIEND FOREVER என்ற சொற்பிரயோகம் ஆகும். இதனை தட்டச்சு செய்யும்போது அந்த சொற்குறியானது பச்சை நிறமாக மாறுவதுடன் கைகள் இரண்டு தட்டுவது போன்று தோன்றுவதை காணக்கூடியதாக இருக்கும் .

இந்த உள்ளீட்டு விசைக்குறியானது (KEYWORD INPUT) முகநூலில் உள்ள சாதாரண விசைக்குறிகளுள் ஒன்றே ஆகும். இதற்கு முன்னர் CONGRATS , LK, IN, மற்றும் தமிழ் சொல்லான "வாழ்த்துக்கள்" போன்றவற்றுக்கும் இவ்வாறு விசைக்குறி நிறம்மாறிகள் பேஸ்புக்கில் காணப்படுகின்றமை அறிந்ததே.

அவ்வாறே BEST FRIEND FOREVER என்ற சொற்பதத்திற்கு இவ்வாறு Bff விசைக்குறியும் அறிமுகப்படுத்தப்பட்டமை தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதியை வெளியீட்டு வைக்கப்பட்டு விட்டதாகவும் அறியப்படுகின்றது.

மாறாக முகநூலில் உலவும் பாதுகாப்பு வதந்திக்கு இதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை பேஸ்புக் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

  • திருடப்பட காரணம் நீங்கள் (பயனர்கள்) தான். 

முதலில் ஒரு விடயம் தொடர்பில் முகநூல் பாவனையாளர்கள் தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும். 50 மில்லியன் தனிப்பயணர்களின் கணக்கு விபரங்கள் கவரப்பட்டதாக கூறப்படுவது உறுதியானது எனினும் அவற்றை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பில் அறிந்துகொள்வது முக்கியம் வாய்ந்தது ஆகும்.

பொதுவாக முகநூலில் பல்வகைமை செயலிகளும் , விளம்பரங்களும் உலா வந்தவண்ணம் இருக்கும். இவ்வாறு பார்ப்பவர் கண்களையும் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது. இவ்வாறு பல இணைய திருடர்கள் (Hackers) மற்றும் தரவு தரகர்கள் செயலிகள் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் பயனர்களை ஈர்த்து அவர்களின் தனிப்பட்ட தரவுகளை மறைமுகமாக பெற்றுக்கொள்வதனையே இதுவரை செய்துவந்துள்ளனர்.

இது முகநூலுக்கு ஒன்றும் புதிதானது அல்ல, பல்வகையான செயலிகளை சொடுக்கி அதில் தாமாகவே தமது விருப்ப தகவல்களை வழங்குவதன் மூலம் தமது தனிப்பயனார் கணக்குகள் களவாடப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக முகநூலில் இடம்பெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

ஆயினும் இவ்வகை செயலிகள், விளம்பரங்கள் போன்றவற்றை முகநூலில் விளம்பரப்படுத்தல் மற்றும் அடைவு நோக்கங்களுக்காக முகநூல் வலைத்தளமானது கண்டும் காணாததும்போல் தான் இதுவரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆயினும் Cambridge Analytica நிறுவன நடவடிக்கைகள் தாமாகவே தரகு செயற்பாட்டினை வேறுசில சமூக வலைத்தளங்களில் பெருமைக்கென விளம்பரப்படுத்திக்கொண்டதன் பின்னரே இவ்வகையான திருட்டுக்கள் தொடர்பில் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் செயலிகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பில் முதல் அவதானம் பெறவேண்டிய பொறுப்பானது தனிப்பயணர்களையே சார்ந்தது என்பதைளனைவரும் தெளிவு பெறவேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

Article By TamilFeed Media, Canada
1870 Visits

Share this article with your friends.

More Suggestions | Technology