நீங்கள் தூங்கும்போதும் பணம் சம்பாதிக்க சிறந்த யோசனைகள் 

விழிப்புடன் இருக்கும்போது மட்டுமல்ல உங்களின் உறக்க நிலைகளின் போதும் பணம் சம்பாதிக்க 5 வழிகள் 
நீங்கள் தூங்கும்போதும் பணம் சம்பாதிக்க சிறந்த யோசனைகள் 

ஒருவரின் ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் என்பது இன்றைய கால தொழில் புரிபவர்கள் இடத்திலும், தொழில் வழங்குபவர் இடத்திலும் இல்லாமலேயே போய்விட்ட ஒரு விடயமாக இருக்கின்றது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உங்களுக்கு இல்லாமல் இருக்காது. நீங்கள் உறங்கும்போதும் அதே யோசனையுடனேயே உறங்குவது யாருக்குத்தான் தெரியாது?

பொதுவாக நிதியியல் ரீதியில் கடன்கள் இல்லாதவரே நிம்மதியான உறங்கும் நபர் என ஆய்வுத்தகவலைக் கூறுகின்றது. கடன்சுமைபற்றிய யோசனையும், வட்டிக்கட்டும் கவலையும் பல மனிதர்களின் உறக்கத்தினை தொலைக்கும் விடயமாக இருக்கின்றது என்பது அறியப்படும் உண்மை.இவ்வகையானவர்களுக்கு ஓய்வு என்பது என்றுமே எட்டாக்கனியாகவே இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.


நீங்கள் உறங்கும் போதும் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா? இது சாத்தியமாகுமா? இவரு பல கேள்விகள் உங்கள் மனதில் எழுவதை உணர முடிகின்றது. எவ்வாறாயினும் உங்கள் சம்பாத்தியம் என்பது இணையமயப்படுத்தலின் பின் உறங்கும் போதும் நிகழப்போகிறது என்பதனை நீங்கள் அறிந்துகொள்வது நல்லது. அவ்வாறே நீங்கள் தூங்கும் நேரம் உறங்காமல் உங்களால் இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல என ஆலோசகர்கள் அறியத்தருகின்றனர்.

அந்த வகையில் நீங்கள் உறங்கும்போது கூட உங்களுக்காக பணம் சம்பாதிக்கும் வழிகள் சில இதோ :


1. வலைப்பக்கம் அல்லது வலைத்தளம் ஆரம்பிப்பது.

இன்றைய காலத்தில் இருக்கும் இடத்தில் இருந்தவாறே வலைத்தளங்களின் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் திறனை பலரும் இந்த சமூகத்தில் வளர்த்து வருகின்றனர் என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இணையத்தில் இலகுவாக கண்டறியும் விதமாகவும், அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் சில வலைத்தளங்களை உருவாக்குவதன் மூலம் நீங்களும் இலகுவாக சம்பாதிக்கலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

  • பொதுவாக நீங்கள் இணையத்தளம் ஆரம்பிக்கும்போது முதலில் உங்கள் வலைத்தளத்தின் பெயர் மற்றும் முகவரி என்பன இலகுவாகவும், கவரும்விதமாகவும் வைக்க வேண்டியது அவசியம். அதன் துணையிடனேயே உங்கள் தளத்தை பார்வை இடுப்பார்கள் உங்கள் தளத்தினுள் வருவது உறுதிப்படுத்தப்படுகின்றது. அவர்கள் இலகுவாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் விதமாகவும் உங்கள் வலைத்தள பெயர் இடம்பெறவேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
  • அதற்கென நீங்கள் எடுக்கும் டொமைன் கூட குறைந்த விலை கொண்டதாகவும், பலராலும் இலகுவில் உபயோகப்படுத்த கூடியதாகவும் இருத்தல் மிகவும் அவசியம். இதற்கென .com , .net , .lk , .in போன்றவற்றை பெற்றுக்கொள்வது நல்லது.
  • அதன் பின்னர் உங்கள் வலைப்பக்கத்தில் வாசிப்பு அல்லது பகிர்வதில் ஆர்வம் காட்டக்கூடிய அற்புதமான உள்ளடக்கத்தை உருவாக்கத் தொடங்குங்கள். உதாரணமாக, சிறு வணிக உரிமையாளர்களுக்கு அவர்களின் வணிக ரீதியில் உதவிடக்கூடிய வலைத்தளம் என்ற போது அதன் பக்கங்களானவை வரி மற்றும் ஆலோசனைகளை பற்றி கூறும் பதிவுகளை இடலாம்,அவ்வாறே வலைப்பதிவில் விலைப்பட்டியல் தொடர்பான விளக்கங்களை கூட அறிமுகம் செய்யலாம். அவ்வாறே உங்கள் வலைக்கு வரும் வாசிப்பாளர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கும் விதமாக அவர்களின் கணக்குகளை உங்கள் தளத்தில் பதியும்படி செய்து அவற்றிற்கு மாதாந்த சஞ்சிகை ரீதியில் புதிய தகவல்களை மின்னஞ்சல் மூலம் கூட அறிவுறுத்தி வரலாம்.
  • உங்கள் வலைப்பதிவு தொடர்பில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டிய விடயம் பக்கங்களுக்கும், பதிவுகளுக்கும் நீங்கள் வைக்கும் தலைப்புக்கள். அவரின் மூலமாகவே வாசிப்பாளர்கள் உங்கள் வலைப்பதிவுகளை தேடி வருவார்கள் என்பதனை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அவ்வாறே உங்கள் வலைப்பதிவு மற்றும் பக்கங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் உங்கள் தொரடப்பு வலையமைப்பினருக்கு கண்டிப்பாக அறிவுறுத்துங்கள். அத்துடன் அனைவருடனும் உங்கள்பதிவுகளை பகிரவும் செய்வது மேலதிக வாசிப்பாளர்களைஉங்களின் பக்கத்திற்கு வரவழைக்கும்.


மேற்கண்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து பின்வரும் வழிகளில் உங்கள் வலைத்தளத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

  • கூட்டிணைந்த முறையிலான தரகுகளை பெற்றுக்கொள்ள :

பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வலைத்தளம் ஒன்றை நீங்கள் செய்யுமிடத்து உங்களின் வலைத்தளத்தில் வேறு நபர்களின் பொருட்கள் மற்றும் சேவை தொடர்பான பதிவுகளை பிரசுரிப்பதன் மூலம் அந்த பொருட்கள் , சேவைகளின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகவர்களாக நீங்கள் மறைமுகமாக செயல்படுகின்றீர்கள். எனவே அவற்றுக்கான விற்பனை தரகினை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு 

அவ்வாறே அந்த பொருள் மற்றும் சேவை தொடர்பான நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பங்காளியைக் கண்டுபிடித்து, அதன் மூலம் ஒரு தனிப்பட்ட குறியீட்டைப் பெறுவீர்கள், எனவே ஒரு பார்வையாளர் உங்கள் தளத்திலுள்ள இணைப்பைக் கிளிக் செய்தால் உங்கள் தரகு கூலி அதன் மூலமும் பெறப்படும். எனவே இது இரு வழி சம்பாத்தியத்திற்கான சிறந்த வழியாகவும் அமைகின்றது.

  • விளம்பரம் மூலம��ன சம்பாத்தியம்.

உங்கள் வலைத்தளம் தரமானதும், பலரால் விரும்பி பார்க்கப்படுவதுமாக இருக்கும் பட்சத்தில் உங்களின் வலைத்தள வருகையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாகவே இருக்கும். இதன் மூலம் உங்கள் வலைத்தளம் பற்றியே நீங்கள் விளம்பரங்களை தேடுபொறிகளில் மேற்கொள்ளலாம் இதன் மூலம் பெறப்படும் வருகையாளர்களின் அதிகரிப்பிற்கு ஏற்பவும் பணம் சம்பாதிக்க முடியும் 

அதே நேரம் பிற பொருட்கள் சேவை வழங்குநர்கள் உங்களது வலைத்தளத்தில் விளம்பரம் செய்துகொள்ளும்போது அதற்கான விளம்பரப்படுத்தல் தரகினையும் நீங்கள் சம்பாதிக்கலாம் என்பதுவும் அறிந்துகொள்ளுங்கள்.

  • அனுசரணையாளர் மூலமான சம்பாத்தியம். 

விளம்பரதாரர்களை விட அனுசரணையாளர்களின் மூலமான பணம் சம்பாதிக்கும் முறை வேறுபடுகின்றது. அதாவது விளம்பரம் ஏதேனும் குறிப்பிட்ட பக்கத்தில் அல்லது பதிவில் மட்டும் சிறிய அளவில் இடம்பெறுவது. அதுவே முழுநீள அனுசரணையாளர்கள் மூலம் ஒவ்வொரு பக்கங்களிலும், பதிவுகளிலும் அந்த அனுசரணையாளர்களின் பெயருடன் இடம்பெறும் மற்றுமொருவகை சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரயுக்தி என்றுசொல்ல வேண்டும். இதன் மூலம் முழு தளத்திற்குமான பணம் சம்பாதிக்கும் முறையாக இந்த அனுசரணையாளர் யுக்தியை சொல்லலாம்.

 

2. உங்களின் தயாரிப்புகளை மற்றும் பொருட்களை இணையத்தின் மூலம் விற்றல்.

இக்காலத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இலகுவாக பணம் சம்பாதிப்பதற்கு கையாளும் ஒரு முறைமை இது ஆகும். அதாவது உதாரணமாக நீங்கள் இனிப்புக்கள் மற்றும் தின்பண்டங்களை தயாரிப்பதில் வல்லுநர் என்றால் அந்த பொருட்கள் தயாரிக்கும் வீடியோ பதிவு அல்லது நீங்கள் தயாரிக்கும் பண்டங்கள் பற்றிய விளக்கப்படங்கள் மற்றும் வீடியோ இணைப்புக்களை சமூக வலைத்தகளங்களிலும், அல்லது உங்களுக்கென ஒரு பிரத்தியேக வலைத்தளம் ஒன்றினை உருவாக்கியும் விளம்பரப்படுத்தலாம். இதன் மூலம் பார்வையாளர்கள் உங்கள் பொருட்கள் பற்றி அறிந்து உங்களை தேடி வருவார்கள். இதனால் விற்பனை அதிகரித்து பணம் சம்பாதிப்பதையும் உறுதிபட அதிகரித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடடத்தக்கது.


3. படைப்புகளின் மூலமான ரோயல்டியினை (Royalty) பெறுதல்.

நீங்கள் ஒரு படைப்பாளி என்ற பட்சத்தில் உங்களின் படைப்புகளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். அதாவது உங்களின் படைப்புக்களை இணையத்தில் விளம்பரப்படுத்தி அதனை பிரபல்யமாக்குவதன் மூலம், பிறர் அதனை கொள்முதல் செய்ய தேடிவருவர். அதனை தகுந்த விலையின் அடிப்படையிலும், ஏல முறையின் மூலமும் பெருவாரியான பணத்தினை நீங்கள் சம்பாதிக்கலாம்.

 

4. வலைத்தளங்கள் செய்து சம்பாதிக்கலாம்.

நீங்கள் வலைத்தளங்களை உருவாகும் திறன்கொண்டிருப்பின் நீங்க செய்யும் தனிப்பட்ட வலைத்தளங்களை சமூக வலைத்தளம் ஊடாகவும், இதர பிற இணையப்பக்கங்களின் ஊடாகவும் விற்பனை செய்தும் கூட சம்பாதிக்கலாம்.

 

5. இணைய வியாபாரம். 

இணைய வாசிகளின் அதிகரிப்புடனும் இணைய வியாபாரமும் அதிகரித்தபடி உள்ளது. உங்களிடம் உள்ள பொருட்களை விற்பதற்கென தற்பொழுது இணையத்தளங்கள் மலிந்துவிட்டன. இது வியாபாரத்தை இலகுபடுத்தும் யுக்தியாகும். உதாரணமாக eBay போன்ற தளங்களில் உங்களின் பழைய பொருட்களை கூட விற்பனை செய்யக்கூடிய வசதிகள் உள்ளது. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி, விற்கும் வியாபாரத்தினை இணையத்தின் மூலம் இலகுபடுத்தி அதிக பணம் சம்பாதிக்கலாம்.

 

மேற்கண்ட யோசனைகளை நீங்கள் விழிப்புடன் இருக்கும்போது ஓடி திரிந்து பணம் சம்பாதிக்கும் நடைமுறைகளை விட தூங்கும்போதும் இலகுவாகவும், எளிதாகவும் பணத்தை மிக வேகமாக சம்பாதிக்கும் யுக்தி ஆகும். நீங்கள் உறங்கும் நேரத்தில் கூட உறங்காமல் உங்களுக்காக பணத்தை சம்பாதித்து கொடுக்கும் உற்ற தோழனாக இணையத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள இந்த முறைகள் மிகவும் சிறந்தது என அறிந்துகொள்ளுங்கள்  

Article By TamilFeed Media, Canada
3285 Visits

Share this article with your friends.

More Suggestions | Business