வெற்றிக்கான இந்த 3 பண்புகளும் உங்களுக்குள் இருக்கின்றதா

வெற்றியை எளிதாக அடைவதற்கு உங்களுக்குள் இருக்க வேண்டிய முக்கிய பண்புகள் 
வெற்றிக்கான இந்த 3 பண்புகளும் உங்களுக்குள் இருக்கின்றதா

வெற்றி என்பதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. தொழில் மற்றும் வாழ்க்கை முறையில் மட்டுமல்ல சகல துறைகளிலும் வெற்றியே அனைவரினதும் விருப்பத்திற்கு உரிய விடயம் ஆகும். இந்த வெற்றியை நீங்கள் அடைந்துகொள்வதற்கு சில முக்கிய பண்புகளை நீங்கள் தன்னகத்தே வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

1. முடிவுகள் எடுக்கும் பண்பு

தீர்மானம் எடுத்தல் என்பது பலருக்கும் சிக்கலான விடயம் . அத்துடன் என்ன தீர்வினை எடுப்பது மற்றும் எடுக்கும் முடிவில் வெற்றி கிட்டுமா என்ற பயம் உள்ளிட்ட விடயங்கள் உங்களை பயமுறுத்தும். இதனால் முடிவு எடுத்தல் என்பதில் இல்லை என்ன முடிவினை எந்த நேரத்தில் சரியாக எடுப்பது என்பது தொடர்பில் உங்கள் திறமையினை வளர்த்துகொல்வது முக்கியத்துவம் பெறுகின்றது.

முடிவுகள் என்பது உங்கள் ஒவ்வொருவரின் இடத்திலேயே தான் தங்கியுள்ளது . நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முடிவுகள் எடுக்க முற்படும்போது அது தொடர்பில் சில முன்னேற்பாடான ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகின்றது. எமது வாழ்க்கை நிலைகளில் முதலில் நாம் தீர்மானம் எடுக்க முனையும் பருவம் ஆரம்ப கல்வியினை நிறைவுசெய்த பின்னர் நமது தொழில்சார் வாழ்க்கையினை தீர்மானிப்பதாக எடுத்துவைக்கும் அடித்தளமானஉயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான தீர்மானம் ஆகும். பொதுவாக அனைவரும் இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பதில் தோல்வியினையே கண்டு இருக்கின்றனர்.

அவ்வாறான நிலையில் உங்களுக்கு பின்வரும் விடயங்கள் உதவியாக இருக்கும். இது கல்வி நிலை மட்டுமல்ல எல்லாவித தீர்மானங்களுக்கும் முன்னதாக நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியதொரு அடிப்படை பண்பு ஆகும்.

1. உங்கள் விருப்பத்தேர்வு எதுவாக இருந்த போதும் அது பற்றிய தேடலும், அந்த விடயம் சார்ந்த அடிப்படை அறிவேனும் உங்களுக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகின்றது.

2. குறிப்பிட்ட விடயம் தொடர்பான அனைத்து சாதக பாதக நிலைமைகளையும் முன்கூட்டியே அறிந்து ஆராய்ந்து வைத்துக்கொள்வதும் முக்கியத்துவம் பெறுகின்றது.

3. நீங்கள் தீர்மானங்களை எடுக்கும் முன்பு அந்த விடயம் தொடர்பில் நன்கு அறிந்த , அனுபவம் பெரியவர்களிடமும் அல்லது நல்ல ஆலோசகர்களிடம் இருந்தும் அறிவுரையினை பெற்று கொள்ளுவது முக்கியத்துவம் பெறுகின்றது.

உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையானது உங்களுடைய பணியை எவ்வாறு வெற்றிகரமாக செய்து முடிக்கலாம் என்பதற்கு உதவுகிறது. ஆனாலும் அந்த யோசனையின் மூலம் உங்களின் ஏற்படும் பாதிப்புக்களை நீங்களே தீர்மானிக்கவேண்டியது அவசியம். அவ்வாறே அவர்களுக்கு நீங்கள் முன்னுரிமை வழங்குவது குறித்தும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

உங்களுக்கு எப்பொழுதும் எதிர்மறையான ஆலோசனைகளை மற்றும் கருத்துக்களை பகிர்பவர் தொடர்பில் நீங்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் . உங்கள் நலனுக்காக ஒருவர் எதிர்மறையான கருத்துக்களை கூறுவதாக கூட நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் உங்கள் முன்னேற்றத்தை விரும்பாத நபர்களும் உங்கள் முடிவுகள் தொடர்பில் எதிர்மறை கருத்துக்கள் கூறலாம். எனவே பிறரிடம் கருத்து கேட்கும் பொது மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

2. நிலைபேறு : விசுவாசத்தை தூண்டுவதற்குத் தேவையான நீடித்த முயற்சி

எந்த விடயத்திலும் நிலையான உறுதியானது உங்கள் வெற்றியை உறுதிப்படுத்தும். ஆரம்பத்தில் உங்கள் முயற்சியில் தோல்விகள் ஏற்பட்டால் நீங்கள் துவண்டு விடகூடாது. தோல்விகள் வந்தாலும் உங்களின் விடா முயற்சியினை கைவிடாது தொடர்ந்தும் நீங்கள் உங்கள் முயற்சியினை மேற்கொண்டு வந்தால் கண்டிப்பான உறுதியான வெற்றியினை நீங்கள் தக்கவைத்துக்கொள்ளலாம்.

அனைத்து சாதனைகளின் தொடக்க புள்ளியானது ஆசைதான், அந்த ஆசைகளின் தீவிரமே உங்களின் முயற்சிக்கான ஸ்திரத்தன்மையினை தீர்மானிக்கும் முக்கிய காரணி ஆகும். உங்கள் வெற்றி இலக்கினை நீங்கள் தீர்மானித்து அதன் மீது பற்று வைப்பது உங்கள் வெற்றிக்கான ஒரு வழி . அவ்வாறே அந்த ஆசை குறித்து நீங்கள் உங்களுக்குள் ஒப்பீடு செய்துகொள்ளுங்கள் அந்த ஒப்பீடு உங்கள் வெற்றியை சரியான முறையில் பெற்றுத்தரும்.

தோல்விநிலை என்பதை பொறுத்த வகையில் பலரும் பல காரணிகளை முன்வைப்பதை காணக்கூடியதாக இருக்கும். அவற்றினை ஆராய்ந்து பார்த்தால் அவை எதுவுமே ஒரு நிலையற்ற மற்றும், சரியான காரணியாக இருக்காது. உங்கள் தோல்விகளுக்கான முதன்மையான அடிப்படை காரணி என்பது நிலையற்ற மனநிலை என்பதுவும் உண்மை. எந்த விடயத்திலும் உறுதியற்று இருப்பின் அதில் எவ்வாறு வெற்றியினை பெறுவது?

தினசரி உங்களின் வேலைகளில் கூட இந்த ஸ்திரத்தன்மையினை கொண்டு செல்வது அவசியம். தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி, நேரத்திற்கான தூக்கம், உணவுக்கட்டுப்பாடு போன்ற விடயங்களில் கூட நிலையான தொடர் முயற்சி உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் வைத்திருக்க உதவிடும். எனவே எந்த விடயமாக உள்ள போதிலும் உங்களுக்குள் இருக்கும் உறுதி நிலையும் ஸ்திரத்தன்மையுமே அதனை வெற்றியுடன் முன்னெடுத்து செல்வதற்கு தாவும் என்பதை மறந்துவிட கூடாது.

நீங்கள் வகுக்கும் திட்டங்களானவை ஒ���ு நேரத்தில் தோல்வியினை கொடுத்தாலும் அதனை மறுபரிசீலனை செய்வது அவசியமானது. அவ்வாறு காரணிகளை மறுபரிசீலனை செய்வது உங்கள் முயற்சி நிலையினை கைவிட கூடாது என்ற ஸ்திரத்தன்மையினை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

3. தன்னிச்சையான பரிந்துரைகள். ஆழ்மனதின் ஈர்ப்புக்கள்

இது உங்கள் ஆழ்மனது ஆதிக்கம் செலுத்தும் காரணி ஆகும். உண்மையில் உங்களுக்கு இருக்கும் மனவலிமையானது பல வெற்றிகளுக்கு உங்களை இலகுவாக வழிநடத்தி செல்லும் என்பதில் ஐயமில்லை.

நீங்கள் வெற்றிக்காக எடுக்கும் முயற்சிகளில் உங்கள் ஆழ்மனதில் ஈர்ப்பு இல்லாம போனால் வெற்றியினை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் எந்த விடயத்தையும் நம்பிக்கையின்றியும் ஆழ்மனதின் விருப்பமின்றியும் மேற்கொள்ளும்பொழுது கண்டிப்பாக செய்துமுடிக்க முடியாது. 

ஆழ்மனதில் எழக்கூடிய யூகங்கள் நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது தன்னிச்சையாக பரிந்துரைசெய்யும் தன்மையினை கொண்டது. எனவே ஒவ்வொருவரின் மனதின் இசைவுக்கேற்ப முடிவுகள் வேறுபடுவதை நாம் இனம் காணுவதன் உண்மைக்காரணமும் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் தோன்றும் நிலைப்பாடுகள் தான் என்பதை உணர்ந்துகொள்வது அவசியம் ஆகும்.

Article By TamilFeed Media, Canada
2597 Visits

Share this article with your friends.

More Suggestions | Business