வெற்றிக்கனியை தட்டிப்பறித்திட சில அறிவுரைகள்

வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கு வழிமுறைகள்

வெற்றியை விரும்பாதவர் யாரும் இல்லை. பிறந்த குழந்தை ஆயினும்,இறை தேடும் மிருகம் ஆயினும் எவ்வகை உயிரினமானாலும் அதன் பிரதான அவா வெற்றி ஆகும்.வாழ்க்கையிலும் சரி,தொழில் முயற்சியிலும் சரி எந்தவொரு விடையத்தை எடுத்து கொண்டாலும் வெற்றி பெறுவது எவ்வாறு என்பது பற்றியே அனைவரும் பொதுவாக எண்ணக்கூடிய விடயம் ஆகும்.ஒவ்வொரு தனி மனிதனும் அந்த வெற்றி என்ற கனியை தட்டிப்பறித்திட முயற்சிகளை ஒரு முறையேனும் மேற்கொண்டுதான் இருப்பான்.

நான் நமது அன்றாட வாழ்வில் பார்க்கும்போது பல வெற்றியாளர்களை கடந்து வந்திருப்போம்.அவர்கள் பற்றிய சிந்தனை வரும்போது அவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்பது பற்றி ஒரு நொடியேனும் சிந்திக்க தவறி இருக்க மாட்டோம்.இது சாதாரண மனித இயல்பு.இவ்வாறு வாழ்க்கையிலும் , தொழில் முயற்சிகளிலும் வெற்றிபெற்ற பிரபலங்கள் அவர்கள் முயற்சித்த மற்றும் அவர்கள் அறிந்த வெற்றியின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டதில் இருந்து சில துளிகள் 

1. முகேஷ் திருபாய் அம்பானி (Mukesh Ambani) - தலைவர், மற்றும் இயக்குனர்-ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் 

  • உங்கள் பார்வையை விசாலமாக திறந்து வையுங்கள்.
  • பயபடாதீர்கள், வலுவாக இருங்கள்.
  • கனவு காணுங்கள்.
  • மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குங்கள்.
  • துணிந்து செயல்படுதல் மிகச் சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
  • வெற்றியின் மீது எப்போது ஆவல் கொண்டிருங்கள்.
  • உங்கள் உறுதியான உள்ளுணர்வுகளை நம்புங்கள். 
  • உங்களை பற்றி நீங்கள் செய்த காரியங்கள்தான் பேசும்.
  • எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.

2. ஜாக் மா (Jack Ma) -நிர்வாக இயக்குனர் மற்றும் சமூக சேவகர் , அலிபாபா குழுமம், சீனா, 

சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த மனிதர் 

  • புறக்கணிப்பை பயன்படுத்துங்கள்.
  • உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive). 
  •  குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள். 
  •  உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
  • உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள். 
  • ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள்.
  • உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.
  • முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள்.
  •  நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல், கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
  • உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.


3. லாரி பேஜ் (Larry Page) - கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவுனர் , மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி 

  • பெரிய இலக்குகளை நிர்ணயுங்கள் 
  • தோல்விகளுக்கு பயப்படாதீர்கள்.
  • நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கட்டமையுங்கள்.
  • உங்கள் கனவுகளை பின்பற்றுங்கள் (Follow Your Dreams).
  • சிறந்த யோசனைகளை வைத்திருங்கள். பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு சிறந்த யோசனைகளை இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள்.
  • உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.
  • சவால்களை ஏற்றுகொள்ளுங்கள்.
  • ஒரே நிலையில் தங்கிவிடாதிர்கள். சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
  • மாற்றங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • பெரிய பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள்தான் தொழிலுக்கு மூல காரணம். கூகுளும் தகவல் கிடைப்பதில் நமக்கு ஏற்பட்ட பிரச்சனையின் தீர்வுதான்.

4. ஜெப் பெசாஸ் (Jeff Bezos) - அமேசான் நிறுவன நிறுவுனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர்.

  • நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படாதீர்கள்.
  • நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள் (Take a Risk).
  • உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் (Passion) விசயத்தையே பின்பற்றுங்கள்.
  • வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
  • நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
  • வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள். 
  • சந்தைப்படுத்தல் யுக்தியை (Marketing) விட வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக அதிகம் செலவழியுங்கள்.
  • உங்கள் நிறுவனத்தில் கலாசாரத்தை உருவாக்குங்கள்.
  • சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.
  • உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள் மூளையை அல்ல. 

5. ���ாபர்ட் கியூஸாகி Robert Kiyosaki- அமெரிக்காவின் பிரபல முதலியிட்டாளர் மற்றும் நிதியியல் ஆலோசகர் 

  • உங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனிதர்களை வைத்திருங்கள். 
  • கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும்.
  • நீங்கள் சேமிப்பதை விட முதலீடு செய்யுங்கள்.
  • எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்று கேளுங்கள். 
  • உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள்

6. எலன் மஷ்க் (Elon Musk) -டெலிச மோட்டார்ஸ் இந்த இணை நிறுவுனர் மற்றும் நிர்வாக இயக்குனர் 

  • நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.
  • நீங்கள் செய்வதை விரும்புங்கள்.
  • தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக எதையும் படைக்க இயலாது.
  • நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும்.
  • நீங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள்.
  • வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.
  • உங்கள் முக்கிய பணியின் மீது கவனம் செலுத்துங்கள்.
  • உங்களுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள். 
  • ஒவ்வொரு விழித்திருக்கும் மணி நேரமும் கடுமையாக உழையுங்கள்.

7. ஆலன் சுகர் (Alan Sugar)- வியாபார வித்தகர், மற்றும் அரசியல் ஆலோசகர்

  • பின்னடைவுகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, தீவிர உணர்ச்சி கொண்டிருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
  • உங்களுக்கு அனுபவம் இருக்கும் விசயத்திலேயே தொழிலைத் தொடங்குங்கள். இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுதுபோக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம்.
  • உங்கள் தொழில் சார்ந்த வல்லுனர்களிடம் அறிவுரை கேளுங்கள். நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கேட்காதீர்கள்- அவர்கள் உங்களுக்கு பிடிக்கும் மாதிரியான அறிவுரை மட்டுமே கூறுவார்கள்.
  • ஒரே நேரத்தில் ஒவ்வொரு அடியாக வையுங்கள். நீங்கள் நடக்க முடியும் முன் ஓட முயற்சிக்க வேண்டாம். சிறியதாக ஆரம்பியுங்கள். ஒன்று கிடைத்தபின் அடுத்த அடியை வைத்து வளருங்கள்.
  • உங்கள் தொழிலுக்கான சந்தையை முழுவதும் ஆராய்ந்து பாருங்கள். சந்தையில் உங்கள் தொழிலை போன்ற மற்ற தொழில்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் தொழிலை ஒத்த தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்குமென்றால், வாடிக்கையாளர்கள் உங்களிடம் ஏன் வாங்க வேண்டும்? என்று ஆராயுங்கள்.
  • முறையான தொழில் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த தொழில் திட்டம் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டும் மற்றும் சந்தையை புரிந்துகொள்ளவதற்கு உதவும். மற்றவர்கள் செயலை தீவிரமாக செய்ய உதவும்.
  • உங்களுக்கென்று தனித்துவமான பாணியை கண்டுபிடியுங்கள். அது புதியதாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல விஷயங்கள் முன்பே செய்தவைதான். செய்யும் விதத்தை சிறந்ததாக செய்யுங்கள்.
  • வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் உங்கள் பணத்தை போடுங்கள். தொழிலில் துணிகர முயற்சி எடுக்க தயாராக இருப்பதை அவர்களுக்கு நிரூபியுங்கள். நீங்கள் தொழிலில் எவ்வளவு தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தினால், அவர்களுக்கு தயக்கம் குறைந்து பணத்தை கொடுப்பார்கள்.
  • யதார்த்தமாக இருங்கள். உங்களுக்கு தோன்றிய சிந்தனை சிறந்தது என்று நினைக்கலாம். ஆனால் அந்த சிந்தனை யாருக்காவது தேவைப்படுமா, செலவு குறைந்ததா, நடைமுறையில் செயபடுத்த முடியுமா? என்பதை யோசியுங்கள்.
  • பல்வேறு ஆதாரங்களிலிருந்து அறிவுரைகளை பெறுங்கள்.

8. மார்க் கியூபன் (Mark Cuban) - அமெரிக்க வியாபார வல்லுனரும் HDTV கேபிள் நெட்வேர்க் இந்த நிர்வாகி 

  • உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். அந்த திறமைகளை உயர்த்துவதற்கு கவனம் செலுத்துங்கள்.
  • நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில் மீது உங்களுக்கு தீவிர காதல் இல்லையெற்றாலும், அது உங்கள் மனதை ஆட்டிபடைக்கவில்லையெற்றாலும் அந்த தொழிலை தொடங்காதீர்கள். நாம் செய்ய இருக்கும் விசயத்தின் மீது காதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.
  • உங்கள் தொழில் எதிர்மறையாக செல்லும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் எண்ணம் இருந்தால் உங்கள் தொழிலின் மீது உங்களுக்கு காதல் இல்லை அர்த்தம்.
  • உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்தெடுங்கள்.
  • உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டபோகிறது, எப்படி விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதை தெரிந்து வைத்துகொள்ளுங்கள்.
  • ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது, உங்கள் ஊழியர்களுக்கு நிறுவனத்தில் வேலை பார்ப்பது பிடிக்குமானால், நேரத்தை எப்படி பயனுள்ளதாய் செலவழிப்பது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். விருப்பம் இல்லாத ஊழியர்கள் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள்.
  • திறந்த அலுவலக இடத்தை அமைத்திடுங்கள், அப்போதுதான் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை தெரியவரும், இது அவர்களின் ஆற்றலை அதிகபடுத்த உதவும்.
  • உங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், உங்கள் ஊழியர்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதியுங்கள்.
  • நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குங்கள். யார் யாரிடம் அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என்பதை வரையருங்கள்.
  • ஆடம்பரமான பொருட்களை வாங்காதீர்கள்.
  • உங்கள் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்வதற்கு பொது தொடர்பு நிறுவனத்தை (PR Firm) பயன்படுத்தாதீர்கள். உங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்களே அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.
  • உங்கள் ஊழியர்களின் வேலையில் வேடிக்கை, பொழுதுபோக்கு போன்றவற்றை புகுத்துங்கள். 

9. கெம்மோன் வில்சன் (Kemmon Wilson ) - ஹாலிடே ஈன் ஹோட்டல் வலையமைப்புகளின் நிறுவுனர் 

  • தினமும் அரை நாள் கடுமையாக உழையுங்கள். ஒரு நாளுக்கு இருபத்துநான்கு மணி நேரம் இருக்கிறது. இதில் பன்னிரண்டு மணி நேரம் .. அதாவது அரை நாள் நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் பயன்படுத்தினால் வெற்றி வசப்படும்.
  • உழைப்புதான் எல்லா வாய்ப்புகளையும் திறக்கும் சாவி.
  • உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது மகிழ்ச்சி உருவாக்காது. உங்களிடம் இருப்பதை எவ்வளவு கொண்டாடுகிறீர்கள் என்பதில்தான் மகிழ்ச்சி உருவாகும்.
  • ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத்திறனை விட மனப்பாங்கே முக்கிய பங்காற்றுகிறது.
  • வெற்றியடைய துணிச்சலாய் காரியங்களை செய்ய வேண்டும்.
  • சம்பாதிப்பதை விட அதிகமாக உழைக்கவில்லையென்றால், உழைக்கும் அளவை விட அதிகமாக சம்பாதிக்க இயலாது.
  • எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.
  • கவலைப்படாதீர்கள், கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. எதிர்காலத்தை பற்றி கவலைபட்டால் உங்கள் நிகழ்காலம் அழிந்துவிடும். கவலையில் எந்த நன்மையையும் கிடையாது.
  • வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.
  • வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள பயப்படாதீர்கள்.

10. சாம் வால்டன் (Sam Walton) - WalMart வர்த்தக குழுமத்தின் நிறுவுனர் மற்றும் அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் 

  • தீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது.மேல்பார்வைக்குத் தீவிரமாகத் தோன்றுகிற சாவால்களைக்கூட தைரியமாக ஏற்றுப் போராடுங்கள். ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம் – இரண்டுமே விலைமதிக்க முடியாத சொத்துக்கள்!
  • வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சரியான வாய்ப்பும் ஊக்கமும் தரப்பட்டால், சாதாரண மனிதர்களால் கூட, பல பெரிய வெற்றிகளை பெறமுடியும்.
  • ஒரு நல்ல யோசனையை, உடனே செயல்படுத்துங்கள். ஆனாலும் அதைச் யோசித்து செயல்பட மறவாதீர்கள்.
  • நாம் நம்முடைய பழைய சாதனைகளில் திருப்தியடைந்து மகிழ்ந்துவிட்டால், நாம் அங்கேயே தேங்கி நின்று விடுவோம். அதை மறந்துவிட்டு, அடுத்து என்ன என்கிற ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகினால், மேலே மேலே சென்று கொண்டே இருக்கலாம்.
  • தனிப்பட்டமுறையிலும், தொழிலிலும் சிக்கனம் என்பது மிகப் முக்கியமான விஷயம். நாம் சேமிக்கிற ஒவ்வொரு துளியும், தவிர்க்கிற ஒவ்வொரு அநாவசிய செலவும் நமது லாபத்தை அதிகரிக்கும்.
  • பணமும், வெற்றியும் நமக்கு கிடைக்கும்போது, அதோடு சேர்ந்து வரும் விஷயம் பொறாமை.
  • நம்மைப்போல் வெற்றியடையமுடியாதவர்கள், அந்த இயலாமையை காட்ட நம்மைப்பற்றி பலவிதமாக பேசுவார்கள். நமது முன்னேற்றத்திற்கு தடைப்போட முயல்வார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், நமது வெற்றிப் பயணத்தை தொடரவேண்டும்.
  • வணிகத்துறையில் பெரியதாக ஜெயிக்கவேண்டுமென்றால், நாம் நம்முடைய லாபத்துக்காக மட்டும் உழைக்கக்கூடாது. நமது வாடிக்கையாளர்களுடைய லாபத்துக்காகவும் உழைக்கவேண்டும்.

11. டோனால்ட் டிரம்ப் (Donald Trump) - அமெரிக்க ஜனாதிபதி, மற்றும் பிரபல தொழில் அதிபரும் , தொலைக்காட்சி பிரபலமும் , அரசியல் விமர்சகரும் 

  •  நீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்ய வேண்டாம். 
  • உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,ஒரு போதும் உங்கள் தவறுகள் *உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • குறிக்கோளை உயர்வாக வையுங்கள்.
  •  ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள்.
  • நீங்கள் செய்யும் விசயங்களில் அதிக தகவல்களை கொண்டிருங்கள்.
  • உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியத்திலேயே கவனத்தை செலுத்துங்கள்.
  • திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள்.
Article By TamilFeed Media, Canada
3041 Visits

Share this article with your friends.

More Suggestions | Business