அதிகமாக சம்பாதிக்க இலகுவான வழிகள்

மேலதிகமாக பணம் சம்பாதித்துக்கொள்ள சில யுக்திகள்
அதிகமாக சம்பாதிக்க இலகுவான வழிகள்

இன்றையகாலத்தில் அனைவரினதும் ஏகோபித்த தேர்வானது எப்படி சம்பாதிப்பது? எவ்வாறு சம்பாதிப்பது என்பதில் இருக்கின்றது. எந்த நிலையில் இருப்பவருக்கும், எந்த வயதில் உள்ளவர்களுக்குமான ஒரே குறிக்கோள் பணம் சம்பாதித்தல் என்பது மறுக்க முடியாத உண்மை. பலரின் அதிகபட்ச நோய்க்கான காரணி கூட பணமாகவே இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது . 

அமெரிக்காவின் மனநல மருத்துவ ஆய்வு நிலையமானது நடத்திய ஒரு ஆய்வின்போது ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியிடப்பட்டது. அதாவது மக்களின் உடல் உபாதைகளுக்கான முக்கிய காரணியாக இருப்பது அவர்களில் வங்கி கணக்கு மீதியில் காணப்படும் குறைந்தளவு பணம் அல்லது பணமின்றிய கணக்கு மீதிகள் ஆகும் என குறிப்பிடுகின்றது. 

இந்த பிரச்சினை சாதாரண நடுத்தர நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல பெரும் பணம் படைத்தவரையும் பாதிக்கும் காரணியே பணமின்மை ஆகும். இவ்வாறு உங்களின் சாதாரண வருமானத்தை விட மேலதிகமாக சம்பாதிக்கும் போது நிதியியல் தொடர்பான அழுத்தங்களில் இருந்து ஓரளவேனும் விடுதலைப்பெறலாம் என நம்பப்படுகின்றது.

இவ்வாறு உங்களின் சாதாரண வருமானத்தை விட நீங்கள் மேலதிகமாக பணத்தினை சம்பாதித்துக்கொள்ள சில வழிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன .


சேவை நோக்கிலான வணிகத்தை தொடங்குதல் 

சேவை நோக்கிலான வணிகங்களை இலகுவாக இணையத்தின் மூலம் ஆரம்பித்துக்கொள்ள முடியும். இணைய வலையமைப்பின் மூலம் இலகுவாக அந்த வணிகம் தொடர்பான விரிவாக்களை மேற்கொள்ளலாம் . 

இவ்வகை இணைய வணிகத்தின் மூலம் சம்பாதித்து வெற்றியடைந்து காட்டியிருக்கிறார் AppSumo நிறுவனத்தின் நிறுவுனர் Noah Kagan. இலகுவான முறையில் இணையத்தின் மூலமாக இலவச சேவையாளர்கள் மற்றும் மாணவர்களைக்கொண்டு இவ்வாறு சேவை நோக்குடைய வணிகம் ஒன்றினை இணையத்தின் மூலம் ஆரம்பித்து பெருமளவில் சம்பாதித்து வருகின்றார் என அறியப்படுகின்றது. குறைந்தது தினம் ஒன்றிற்கு $1000 அமெரிக்க டாலர்களை இவர் மேலதிகமாக சம்பாதிப்பதாகவும் அறியப்படுகின்றது.

பகுதி நேரமாக உங்களின் வழமையான வேலையநேரம் முடிந்த பின்னர் கிடைக்கும் ஒய்வு நேரங்களில் இரவுநேர சிற்றுண்ட்டி தயாரிப்பு, சேவை நோக்கிலான விநியோக முறைகள், விற்பனை சந்தைப்படுத்தல், போன்ற பல்வேறுபட்ட இணையம் மூலமான தொழில்களின் மூலம் நீங்கள் வெகுவாக சம்பாத்திக்க முடிவதாக அறிய முடிகின்றது.

வீடு மற்றும் மனைத் தரகு 

மனைத்தரகு முறையின் மூலம் பல ஆயிரங்களில் சம்பாதித்துக் கொள்ளலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு சொந்தமான மனையோ அல்லது நிலமோ இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. குறைந்தளவு முதலீட்டினை கொண்டு தொலைபேசி மூலமாகவே உங்களின் இடைத்தரகு தொழிலினை செவ்வனே செய்து கொள்வதன் மூலமும் பணம் உழைப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
தரகு மூலம் வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையிலான உறவை பேணுதல் பொருட்டு இரண்டு தரப்பினரின் மத்தியில் இருந்துமான கூலியினை பெற்றுக்கொள்வதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என உணரப்படுகின்றது. ஒரு சிலர் இதனை முழுநேர தொழிலாகவே செய்த வண்ணம் இருப்பதை அவதானிக்கலாம்.

வீட்டு விநியோக தரகுகளாக இருத்தல்.

பலரும் இணையங்களில் பொருட்களை கொள்வனவு மற்றும் விற்பனை செய்வது தொடர்பில் பலவாரியான சிக்கல்களை எதிர்கொள்வது வழக்கம். குறிப்பாக விநியோகித்தர் சரியாக கிடைக்காததும், குறிப்பிட்ட நேரத்தில் விநியோகிக்க போதிய ஆட்பலம் இல்லாமையும் ஆகும். இதற்கென விநியோக முகவர்களாகவும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வதால் பணம் இலகுவாக சம்பாதிக்கலாம். 

இன்றைய காலத்தில் பொதுவாக பலரும் பல்வேறுபட்ட இணையங்களின் மூலம் பொருட்களை கொள்வனவு விற்பனை செய்து கொள்வது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது இல்லை. அவ்வாறே வெளிநாடுகளில் இருக்கு பொருட்களை கூட இவ்வாறு இணையத்தின் மூலம் வாங்கி விடலாம் ஆனாலும் அவற்றை குறித்த விலாசத்தில் சரியாக சேர்க்கும் தரப்பினரை இனம் காண்பதுவே அரிதானது. இவ்வாறு இடைத்தரகர்கள் போன்ற விநியோக சேவையினை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சித்தொகுப்பு.

இன்றைய கால இளைஞர்கள் பலரும் விரும்பி செய்யும் தொழில் ஆகும். இடம்பெறும் நிகழ்வுகளை தொகுத்து சுவாரஷ்யத்துடன் வழங்கிடவும், அறிவிப்பு செய்வதற்கும் எனவும் பலரை பகுதிநேரமாக அழைத்து பணம் சம்பாதிக்க பலரும் உதவுகின்றனர். இதன் காரணமாக பலரது வெளிவாரியான தொடர்புகளும் கிடைத்திடும் என்பதில் அச்ச��ில்ல���.

பயண முகவர் 

பல்வேறு நபர்களுக்கும் விடுமுறை காலங்களில் வெளி ஊர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் செல்லவேண்டிய ஆர்வம் இருக்கும். ஆனால் அது தொடர்பான சரியான விவரங்களை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இவ்வகை தரப்பினருக்கு உதவும் வகையில் பயண சீட்டுக்களை விற்பனை செய்தல், பயன் தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கல் போன்ற அனைத்துவித சேவைகளையும் செய்துகொடுப்பதன் மூலமாகவும் பணம் இலகுவாக பெறப்படுகின்றதாக கூறுகின்றனர்.

Article By TamilFeed Media, Canada
969 Visits

Share this article with your friends.

More Suggestions | Business

Advertise Here | 6479296626