பெண்கள் சமாளிக்கும் பணியிட பிரச்சினைகள்

பெண்கள் சமாளிக்கும் பணியிட பிரச்சினைகள்

உலகெங்கிலும் சகலவிதமான துறைகளிலும் பெண்களின் தலைமைத்துவமும் ஆளுமைகளும் உள்ளதை நாம் அறிவோம் சகலவிதமான துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஈடுபடுவது மறுக்க முடியாத ஒன்று .ஒப்பிவிட்டு அளவில் ஆண்களுடன் போட்டியிடும் அளவு பெண்களின் தனித்துவம், உறுதி, திறமை என்பன வலுப்பெற்றுள்ளமை தெரிந்ததே.

இவ்வகையாக தொழில் புரியும் இடங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வேலை பார்க்கும்பொழுது பல பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியும் உள்ளது. இது பாலியல் சார்ந்ததாக மட்டுமன்றி பலவிதமானதாகவும் அமைந்து விடுகின்றது.

ஆண்கள் எதிர் பெண்கள் (Men vs Women )

ஆண்களும் பெண்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவர்கள். இந்த இரு பாலாரின் தனித்துவ பண்புகளாலும் தனிப்பட்ட திறைமைகளாலும் தமது அன்றாட தொழில் சிக்கல்களை சமாளித்தும் வெற்றி கண்டும் வருகின்றனர் .ஆண்களின் சிந்தனையில் பெரும்பாங்கானது பெண்களை பற்றியதானது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆயினும் எந்தவொரு ஆடவனுக்கு தமக்கு நிகரான திறமைகளுடன் பெண்கள் நடந்துகொள்வதை அவமானமாகவே கருதுவான்.பெரும் நிறுவன சூழ்நிலையில் ஆண்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பெண்களும் இயல்பாகவும், இலகுவாகவும் நடந்துகொள்வதில் அவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியும் வருகின்றனர் ,

தொழில் புரியும் பெண்கள் தமது சக மனிதரிடம் எதிர்பார்ப்பது கரிசனையை மட்டுமே, கவலையை அல்ல.! அவள் தமது திறமையின் மூலம் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவாளே தவிர பாலின வித்தியாசத்தில் அல்ல .பெண்களும் ஆண்களும் ஒன்றித்தே பணியினை மேற்கொள்வார்களேயானால் தொழிற்துறையில் பாரிய சாதனைகளை வெற்றிக்கொள்ளலாம் .

பாலின சாருகை (Gender Bias )

பெருநிறுவன சூழ்நிலைகளில் பெண்கள் சந்திக்கும் அடுத்த பிரச்சினை இந்த பாலின சாருகை ஆகும். பொதுவாக தனியார்துறை நிறுவனங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் தொழிற்சார் இடைவெளியை குறைக்கும் நோக்கில் வேலைகளை வழங்குவது தொடர்பிலும் பணிகளை முன்னெடுப்பது என்பதிலும் காணப்படும் பேரிடைவெளியினை குறைப்பதற்கு பல தனியார் பெருநிறுவனங்கள் தற்காலத்தில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன ஆயினும் அரசத்துறை பெருநிறுவனங்களின் இந்த சாருகை இன்னும் நிலவிக்கொண்டுதான் இருக்கின்றது.

பிரயாணங்கள் மற்றும் உடல்வலிமை சார்ந்த சில தொழில்கள் ஆண்களால் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது. எனவே அவ்வகை தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.அத்துடன் பெண்களை அவ்வகை தொழில்களில்ஈடுபடுத்துவது என்பது சிரமம் .அவ்வாறே சில பெருநிறுவன கம்பெனிகள் பெண்களை பணிக்கு அமர்த்தும்போதே அவர்களின்மகப்பேற்றுக்கால விடுமுறைகள் , திருமணத்தின் பின் தொடர்ந்தும் தொழில் செய்வார்களா என்பன தொடர்பில் மிகவும் கரிசனை காட்டி வருகின்றமை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த உலகத்திற்கு இன்னுமொரு உயிரை கொண்டுவரும் பேறினை பெற்றவள் பெண் . அனால் அந்த நிலையே அவளின் தொழில் துறை வாழ்க்கையை பாதிப்பதாகவும் அமைந்து விட கூடாது.

எனவே ஐ.நா போன்ற சமூகவியல் நிறுவனங்கள் பாலின சாருகை இடைவெளிகளை குறைப்பது தொடர்பில் கரிசனை காட்டி வருவது மட்டுமன்றி உறுதி மொழிகளை அமைத்துக்கொள்ளவும் பணிக்கின்றது.

தொழில் நிலை சமமின்மை (Work life imbalance)

பல பெண்கள் தமது தொழில் நிலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் வேறுபடுத்திக்கொள்ள தடுமாறிவிடுகின்றனர்.ஒருசில பெண்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதனால் தொழில் நிலை சவால்களில் கோட்டை விட்டு விடுகின்றனர்.அவ்வாறே பல குடும்ப பெண்களை தொழிலில் மட்டும் தமது கவனத்தை செழுத்துவதனால் குடும்ப வாழ்க்கையில் தோல்வியை தழுவிக்கொள்கின்றனர் .இதனால் தமது குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் இருக்கும் பெண்கள் தமது கோபத்தை பணி இடங்களில் காட்டுவதும், அவ்வாறே வேலைசெய்யும் இடங்களில் தமக்கு மேலாளருடன் ஏற்படும் முறுகல் நிலைகளை அவருக்கு வெளிப்படுத்தாமல் அதை வீட்டில் உள்ளவர்கள் மீது கொட்டுவதுமாக பெண்கள் நடந்து கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

சில பெண்களுக்கு தாம் வேலைக்கு அவர்களின் வீட்டில் அனுமதித்து இருக்கவும் மாட்டார்கள் பல எதிர்ப்பின் மத்தியிலேயே பெண்கள் இவ்வாறு பணிகளுக்கு வருவதால் அவர்களால் அந்த வேலையில் தொடர்ந்தும் கவனத்தை செலுத்த முடியாமலும் திண்டாடுவதை காணலாம். 

 இவ்வகை பிரச்சினையில் இருந்து பெண்கள் தாமாகவே வெளிவர முயற்சிக்க வேண்டும், பணிகளின் நடுவில் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கொஞ்சமாவது நேரத்தை ஒதுக்கி நேர முகாமைத்துவத்தை சரிவர செய்துகொள்ள வேண்டும்.இதுவே அவளுக்கான பெரும் சவால் ஆகும் .

 அகந்தை முரண்பாடுகள் (Ego clashes)

இதுவே பெரும்பாலுமான தொழிற் நிலையங்களில் நிலவும் பாரதூர பிரச்சினை . ஆதாம் என்ற உலகின் ஆதி மனிதனை உருவாக்கிய கடவுள் அவனின் விலா எலும்பில் இருந்து ஏவாள் என்ற பெண்ணை தோற்றுவித்தது முதல் இந்த அகம்பாவம் என்னும் அறப்பேய் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புகுந்து விட்டது. பொதுவாக பணியிடங்களில் உள்ள ஆண்கள் தமது மேலாண்மையை நிரூபித்து கொள்ள முயற்சிப்பார்கள்.


உதாரணமாக தமக்கு மேலதிகாரியாக இருக்க கூடிய பெண் மேலாளர்கள் தொடர்பில் அங்கு பணிபுரியும் ஆண்கள் பல கிசுகிசுக்களை அலுவலகத்தில் உள்ள மற்றவர்களிடம் உலவ விடுவார்கள்.அந்த மேலாளர் தமக்கு உதவியாக ஏதும் சாதகமாக செய்யுமிடத்தில் அவர் பற்றி நல்ல விதமாக பேசுவதும் அறியக்கூடியதாகும்.பெண்கள் தமது இணை பணியாளர்கள் மூவர் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரையும் சமாளிப்பதில் பெரும் சவாலை எதிர்கொள்கிறாள் . வேலைக்கு செல்லும் பெண்கள் தமது சக பணியாளர்களில் யாரை நம்புவது என்ற பெரும் குழப்பத்திலேயே தமது காலத்தில் பெரும் பகுதியினை செலவழித்து விடுகிறாள் .இவ்வாறு பலரையும் சமாளித்து சகபாடிகளை தமது தோழமையாக்கி கொள்ள அவளது பகீரத பிரேயத்தனம் பலவகையாக அமையும்.

பாலியல் துன்புறுத்தல்கள் (Sexual Harressment)

மிகவும் வருந்தத்தக்க,அவமானகரமான காரணியாக பெண்களுக்கு எதிராக பாலின துன்புறுத்தல்களை கூற வேண்டும். பணியிடங்களில் தற்காலத்தில் அவதானிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது இந்த விடயம்.சக பெண்களை கவர்ந்து தமது காரியங்களை சாதிக்க நினைக்கும் ஆண்கள் அவர்களுக்கு பாலியல் தொல்லைகளை கொடுப்பதை பல காரியாலயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.பல பிரைச்சினைகளுக்கு மத்தியில் பணிகளுக்கு வரும் பெண்கள் இவ்வகையாக தமக்கு ஏற்படும் தொல்லைகளை கண்டும் காணாமலும் போய் விடுவார்கள்.இதற்கான காரணம் அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் ஆகும்.இதனால் பல ஆண்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதை காணக்கூடியதாக உள்ளது .

இவ்வாறு ஏற்படும் துன்புறுத்தல்கள் மற்றும் தொல்லைகளுக்கு எதிராக பல்வேறு சட்டங்களும்,ஒழுக்க விதிமுறைகளும் கட்டாயப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றை பெண்கள் துணிந்து செய்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.அதாவது பெண்கள் சுய மரியாதைக்கும் குடும்ப சூழ்நிலைக்கும் பயந்து தமக்கு நேரும் அநீதிகளை வெளியில் சொல்வதற்கு அச்சப்பட்டு அப்படியா விட்டு விடுகின்றனர்.இதனால் பாரிய மனஉளைச்சலுக்கு ஆளாவது அறிந்ததே. இந்தகாரணி அவர்களின் தொழில்முறை வாழ்க்கையை பாதிக்கவும் செய்கின்றது.

மாறாக பல பெண்கள் தமக்கு நேர்ந்த அநீதியை வெளிக்கொண்டுவந்து இவ்வகை சட்டங்களின் மூலம் தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதுடன் பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகின்றனர்.இது வரவேற்கத்தக்க விடயம் ஆகும் 

முன்மாதிரியாக இருக்க தவறுதல். (Lack of role Models)

என்னதான் பெண்கள் தமது பணியிடங்களில் தமது முழுத்திறைமைகளையும் காட்டி வேலைகளை மேற்கொண்டாலும் இறுதியில் அனைத்து பாராட்டுக்களும் ஆண்களுக்கு சென்றுவிடுவது பணியிடங்களில் சர்வ சாதாரணமாக போகும் விடயம் ஆகும்.அத்துடன் பெண் ஆளுமைகளை முன்மாதிரியாக காட்டுவதில் உள்ள சிக்கலே அவ்வகை அனைத்து திறைமைகளுடனான பெண் ஆளுமைகள் எண்ணிக்கை அளவில் குறைவாகும்.என்னதான் பெண்கள் பகீரத பிரேயத்தனைகளை தமது பணிக்காக மேற்கொண்டாலும் தலைமைத்துவத்திற்காக தேடும் பொழுது பெண்கள் பின் தள்ளப்படுவது அறியக்கூடியதாக உள்ளது.

அவ்வாறே ஆண் தலைமைகள் தமது மேலாளரிடம் எதுவித இடையூறுகளும் இன்றி இலகுவாக கற்றறியும் விடயங்களை பெண்கள் மிகவும் சிரமப்பட்ட அறிந்தது கொள்கின்றனர்.அவ்வாறே ஆண்களின் வழிகாட்டுதலை பெரும் பட்சத்தில் கூடுதலாக தொடர்பாடல் தடைகள் பெண்களுக்கு நிலவுகின்றது.இதனால் தவறுதலாக வழிகாட்டப்படுத்தலும் பிழையாக விடையங்களை புரிந்துகொள்வதும் இடம்பெறுகின்றது.

ஆயினும் இந்த தடையானது பெரும்பாலும் குறைவடைந்து வருகின்றது என்பதை காணக்கூடியதாக உள்ளது. இப்பொழுது பல உங்களில் பெண் தலைமைத்துவங்களே முன்மாதிரிக்கு உதாரணமாக விளங்குகின்றதை இங்கு குறிப்பிடலாம் .

ஓய்விடங்களில் வதந்திகள் (Restroom Gossips)

வதந்தி இல்லாத நிறுவனங்கள் ஐஸ் கிரீம் இல்லாதா சாதாரண கேக்கை போன்றது.உணவருந்தும் அறைகள்,ஓய்வறைகள் போன்றனவே அலுவலகங்களில் வதந்திகள் பறக்கும்,பிறக்கும் இடங்களாக காட்ச்சி தருகின்றது என்று ஆய்வு கூறுகின்றது.இவ்வாறு உருவாக்கப்படும் வதந்திகளேயே ஒவ்வொரு பெண்களுக்கு மட்டுமல்ல சக பணியாளர்களுக்கும் பாரிய பிரைச்சினையாக வந்து முடிகின்றது.ஒரு பெண் தமது பணியிடத்தில் முன்னேற்றம் காணும்போது சக பணியாளர்களால் உன்னிப்பாக அனுமானிக்கப்படுகின்றாள்,ஊகங்களுக்கும் உள்ளாகின்றாள் .இவ்வகை யூகங்களே உண்மைகளாக கருதப்பட்டு பின்னாளில் பெரிய பிரைச்சினைகளுக்கும் வழி அமைத்து விடுகின்றது.விமர்சிக்கப்படும் விபரீத விளையாட்டு ஒருவரின் வாழ்க்கையையே மாற்றியும் விடுகின்றதை நாம் அறிவோம் .

இவ்வகை பிரச்சனைகளை நாம் இலகுவில் இல்லாமல் செய்யலாம் .பெண்கள் கையாள வேண்டிய சிறந்த ஆயுதம் அமைதியாக இருப்பது மட்டுமே.பெண்களுக்கு இயற்கையாகவே உணர்ச்சிகள் என்பது அதிகம் .பின்னல் பேசுபவர்களை கண்டு பலர் கோப உணர்ச்சியை கொட்டிவிடுவதும்,அநீதிக்கு எதிராக பொங்கி எழுவதுமாக இருப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.யார் என்னதான் நேரத்தினை செலவழிக்கவென தகாத கதைகளை கூறி வந்தாலும் தன்னை பொருட்படுத்தாமல் காரியத்தில் கண்ணாக இருக்கும் பட்சத்தில் அவள் இந்த சில்லறை விடயத்தை தூசு போல உதறி தள்ளி விட்டு முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும். அவ்வாறே இவ்வகை எதிர்மறை விமர்சனங்களை தமக்கு சாதகமாகவும் மாற்றும் திறமை பெண்களின் தன்னம்பிக்கையிலும் தனித்திறமையிலும் தங்கியுள்ளது.
சவால்கள் எல்லா இடங்களிலும் தான் உள்ளன அவற்றை சரியாக முகம் கொடுத்து எவ்வாறு முன்னேறி வருவது என்பதிலேயே பெண்களின் திறமையும் தனித்துவமும் அமைந்துள்ளது.எனவே தமது இலக்கை நோக்கி முன்னேறி செல்லும் பெண்கள் பல தடைகளை சமாளிக்க வேண்டியும் உள்ளது இலக்குகளில் தெளிவும் திடமும் கொண்ட பெண்ணே இவ்வகைக்கு சவால்களை சமாளித்து வெற்றிகளை அடைகிறாள் பணியிடங்களில் பெண்கள் இதெல்லாம் சமாளிக்க வேண்டும் 


Article By TamilFeed Media, Canada
1766 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle